பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செ. ப. க. தமிழ்த்துறை நிகழ்ச்சிகள் 荔扮演 என் அரிய நண்பரும் என்ஆசிரியப்பெருந்தகை பேராசிரியர் நடேச முதலியார் (திருச்சி) அவர்களின் திருமகனாரும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத்தலைவரும் பேராசிரியருமான டாக்டர் ந. சஞ்சீவியிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. இது வேங்கடத்து எம்மான், 'அன்பனே, என்னையும் என் ஊரையும் பற்றியே. சிந்தித்துக் கொண்டிருக்கும் நீ, என் மீதும் நான் கோயில் கொண்டிருக்கும் பதியாகிய திருப்பதியின்மீதும் எழுந்த தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் சிறிது சிந்திப்பாயாக' என்று என்னைப் பணிப்பது போல் இருந்தது. இங்ஙனம் ஒரு பெருங்கடமையை எங்கனம் ஆற்றுவது என்று திகைத்துக் கொண்டிருக்கும்பொழுது நம்மாழ்வார் இறைவன் இருப்பைப் பற்றிக் கூறியுள்ள, கறந்தபால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதே அமுதில் பிறந்த இன் சுவையே சுவையது பயனே!" என்ற பாசுரப்பகுதி நினை விற்கு வந்தது. தமிழ் இலக்கியக் கடலிலும் திருவேங்கடத்தைப் பற்றிய குறிப்புகள் அங்ங்னமே இருப்பதாக எண்ணினேன். எள்ளினுள் எண்ணெய்போல் இருக்கும் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலின் இருப்பிடமும் அங்ங்ணம் தானே இருக்கமுடியும்? கடிதம் பெற்ற நாள் தொட்டு சில வாரங்கள் இப்பொருள் பற்றியே என் சிந்தனை ஒடிய நிலையிலிருந்தது. இறுதியில் (1) சங்ககால வேங்கடம், (2) இடைக்கால இலக்கியத்தில் வேங்கடம், (3) திருவேங்கடத்தின்மீது எழுந்துள்ள நூல்கள் என்ற மூன்று தலைப்புகளில் என் பொழிவுகளைத் திட்டமிட்டேன். திருப்பதியிலுள்ள நூலக வசதிகளுக்கேற்பவும், என் ஒய்வுக் கேற்பவும், என் அறிவிற்கேற்பவும் இப்பொழிவு கள் அமைந்தன. பிப்பிரவரி 28, மார்ச்சு 1, 2 (1974) 1. திருவாய் 8 1 : 7