பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔9份 நினைவுக் குமிழிகள்-4 நாட்களில் நிகழ்த்தப் பெற்றன. இதற்கு மேலும் திருவேங்கடத்தைப் பற்றிய இலக்கியச் செய்திகளைத் திரட்ட இப்பொழிவுகள் ஒரு தூண்டு கோலாக அமைதல் கூடும் என்ற நிலையில் அமைதி பெற்றேன். பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் ஆராய்ச்சி உலகிற்கும் பொது மக்கள் உலகிற்கும் இடையே ஒரு பாலம்போல்-சேதுபோல்-அமைந்து திகழ்ந்ததைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். பிள்ளையவர்கள் அறிஞர்கள் ஆராய்ச்சியால் கண்டறிந்த கருத்துகளையெல்லாம் பொதுமேடையில் எளிய முறையில் வாரி வழங்கிப் பொது மக்களிடையே சிந்தனை: மனப்பான்மைக்கு வித்திட்டு அதனை வளர்த்தவர். தம் சொல்வன்மையால் பொதுமக்களிடம் அழகிய குழைவுத் தமிழில் இலக்கியச் சுவையை நன்கு ஊட்டிய தால் இன்று அவர்கள் உள்ளத்தில் சொல்லின் ஈெல்வராக நிலையான இடம் பெற்றுத் திகழ்கின்றார். இத்தகைய பெரியார் அவர்களின் நினைவுச் சொற். பொழிவுகளை ஆற்றும் பேறு பெற்றமைக்குப் பெரிதும் மகிழ்ந்தேன். இனி இந்த மூன்று பொழிவுகளில் அமைந்த கருத்துகளை சுருக்கிக் கூறுவேன். முதற் பொழிவு: இதில் சங்ககால வடவேங்கடம் வேறு, இன்றைய திருவேங்கடம் வேறு என்ற கருத்தைச் சங்க இலக்கியச் சான்றுகளுடன் வேறுபடுத்திக்காட்டியுள்ளேன். வேங்கடம்' என்ற சொல்லும் காலந்தோறும் மாறிப் புதுப் புதுப் பொருள்களைப் பெற்றுப் பொலிவதையும் விளக்கி யுள்ளேன். சிலப்பதிகார ஆசிரியர் வடவேங்கடம்' என்ற சொல்லை ஆண்டுள்ளார்-வடக்கிலுள்ள வேங்கடம்" என்பதற்கு மேல் இதற்குப் பொருள் இல்லை; இக்கருத்தை யொட்டியே பாரதியாரும் திருப்பதி ᎥᏝ ☾ö 6þ☾öyü வடமாலவன் குன்றம்' என்று காட்டினார். இஃது எல்லை. யைக குறிப்பிடுவதால், இது தவறான வழக்கு” என்பது