பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செ. ப. க. தமிழ்த்துறை நிகழ்ச்சிகள் 507 தெளிவு. தொல்காப்பியம் குறிப்பிடும் வடவேங்கடம்’ தான் உண்மையில் எல்லையைக் குறிப்பது. தமிழ்கூறு: நல்லுலகிற்கு வடபால் உள்ள நாட்டுப் பகுதியும் சங்க காலத்து வேங்கட நாட்டுப் பகுதியும் இயற்கையமைப்பி லும் தட்பவெப்ப நிலைகளிலும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் காணப்படுவதால், சங்க இலக்கியங் களும் தொல்காப்பியமும் குறிப்பிடும் வடவேங்கடம்’ என்ற சொல் தமிழ் கூறு நல்லுலகிற்கு வடதிசை யில் மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக்கடற்கரை வரையிலுமுள்ள நீண்ட மலைத் தொடர்கள், பொறுக்க முடியாத வெப்பத்துடன் கூடிய காடுகள் சுவடுகள் இவற்றுடன் கூடிய குன்றுகள், சிறுசிறு குன்றுகள் அடங்கிய பகுதியையே குறிக்கின்றது என்பதை நன்கு விளக்கி யுள்ளேன். சங்க இலக்கியங்கள் இப்பகுதியை மொழி பெயர் தேயம் என்று குறிப்பிடுவதாலும் இப்பகுதிகளில் "கன்னடமும் களி தெலுங்கும் பேசப்பெறுவதாலும் இவை என் கருத்திற்கு அரணாக அமைகின்றன. இரண்டாம் பொழிவு : இந்தப் பொழிவின் சுருக்கம் இது, (1) திருமலையின் பெருமை தேசிகர் பாடலால் கண்ணன் அடியிணை' (தே. பி. 82) எடுத்துக் காட்டி வேங்கடம்' என்ற சொல்லின் பொருள் மாற்றத்தை விளக்கியுள்ளேன். (2) ம தி ப் பி. ற் கு ரி ய பெருமகனார் திரு . K. கோதண்டபாணிபிள்ளையவர்கள் இளங்கிரி (இரண் திருவந், 53) என்ற சொல்லுக்கும் இளங்கோயில் (இரண் திருவந். 54) என்ற சொல்லுக்கும் கொண்ட பொருள் தவறு என்பதை விரிவாக விளக்கியுள்ளேன். (3) ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் பெற்ற திருவேங்கடம் பதினோராம் நூற்றாண்டில்தான் பெரும் புகழ் அடைந்ததற்கு இராமாநுசர் திருவேங்கட