பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5●& நினைவுக் குமிழிகள்-4 முடையான்மீது காட்டிய அக்கறையும் அவருடைய சொந்தப் பெருமையும் சிறப்புமாகச் சேர்ந்து திருக் கோயிலின் பெருமையை உயர்த்தி விட்டது என்பதைப் பல வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கியுள்ளேன். (4) வேங்கடம் முருகனுக்கு உரியது என்று கூறுவோரின் கருத்து தவறானது என்பதைப் பல்வேறு சான்றுகளால் மறுத்தும், அது திருமாலுக்கே உரியது என்பதை சான்றுகளால் மெய்ப்பித்தும் காட்டியுள்ளேன். (5) இடைக்கால இலக்கியமாகிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலிருந்து திருமலையின் இயற்கைக் காட்சிகள், வேங்கடத் தெம்மானின் பெருமை, சூடிக் கொடுத்த சுடற்கொடி வேங்கடம் மேவிய விளக்கிற்கு அனுப்பிய மூன்று செய்திகள், அகப்பொருள் தத்துவம் பாசுரங்களில் அமைந்திருக்கும் அற்புதம் முதலியவற்றை யும்; மற்றோர் இலக்கியமாகிய கம்பராமாயணத்தில் சுக்கிரீவன் வாக்காக வரும் வேங்கடத்தின் வளம்,பெருமை, அங்கு வதியும் மாமுனிவர்களிள் சிறப்பு ஆகியவற்றையும்; பிறிதோர் இலக்கியமாகிய வில்லிபாரதத்தில் அருச்சுனனின் தீர்த்தயாத்திரையை விளக்கும் முகத்தான் வேங்கடத் தின் பெருமையை எடுத்துக் காட்டியுள்ளதையும் விளக்கி யுள்ளேன். மூன்றாம் பொழிவு : வேங்கடத்தின் மீதும் வேங்கட வாணன் மீதும் எழுந்துள்ள (1) திருவேங்கடத் தந்தாதி (2) திருவேங்கட மாலை (3) திருவேங்கடக் கலம்பகம் என்ற மூன்று நூல்கள் (4) ஆசிரியர் பெயர் அறிய முடியாத சேடமலை பதிற்றுப்பத் தந்தாதி, (5) திரு வேங்கடத்தலபுராணம். (6) மணவை திருவேங்கட முடையான் மேகவிடுதூது. (7) திருவேங்கடமுடையான் திருவாயிரம் (8) திருவேங்கடமாலை என்றஎட்டு நூல்களி விருந்தும் திருமலையின் இயற்கைக் காட்சிகள், தத்துவக் கருத்துகள், திருவேங்கடமுடையானின் பெருமை,