பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செ. ப. க. தமிழ்த்துறை நிகழ்ச்சிகள் あ勢9 திருவேங்கடத்தின் சிறப்பு, எம்பெருமானின் வீரச்செயல் களும் வெற்றிச் சிறப்புகளும், இலக்கிய நயங்கள் ஆகியவை எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. இந்த பொழிவுகளை பல்கலைக் கழகம் நூல் வடிவ மாக்கக் கருதவில்லை. அவர்கள் இசைவு பெற்று பாரி நிலையத்தின் மூலம் (184, பிரகாசம் சாலை, சென்னை600 108) வெளியிட்டேன். இந்த அரிய நூலுக்குப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தாமரைச் செல்வர் நெ. து. சுந்த்ரவடிவேலு அரியதோர் அணிந்துரை வழங்கி ஆசி கூறினார். நூலைத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 52-ஆவது பிறந்தநாள் விழாவின் நினைவாக, பொற்புறு தமிழ்த்தாய் மலரடி பிணித்த புல்லிய விலங்கினைத் தகர்த்து நற்புகழ் தமிழர் இதயமாம் அணையில் நாவலர் போற்றிட அமர்த்திச் சிற்பவண் குறளாம் ஆணையெப் புறத்தும் திகழ்ந்திடத் தமிழ்ப்பணி புரியும் அற்புதக் கருணா கிதியெனும் தலைவர் அன்பினுக் குரியதிந் நூலே என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். இந்த நூலின். நூல் முகத்தில் கலைஞரைப் பற்றி யான் எழுதிய குறிப்பு : “ தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பீடும் பெருமையும் நிறைந்த ஆட்சி இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலு மிருந்தும் ஒரே கருத்துடன் பாராட்டைப் பெற்றுத் திகழ் கின்றது. கலைச் சுவையும் தமிழ்ச் சுவையும் ஈத்துவக்கும் இன்பமும் ஒருங்கே நிறைந்த இவரிடமிருந்து கருணை வெள்ளம் பல்வேறு துறைகளில் இவர் மேற்கொண்ட சமூக நலத் திட்டங்களில் பாய்ந்து செல்கின்றது. பிச்சைக். காரர்கள், கண்ணிழந்தோர், உடல் ஊனமுற்றோர்,