பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 நினைவுக் குமிழிகள்-4 ரிக்ஷா வண்டிக்காரர்கள், சாலையோரம் வாழ் ஏழை மக்கள் ஆகியோர் இவர்தம் கருணையின் பலனைத் துய்த்து இவரை வாழ்த்துகின்றனர். இவர் ஆட்சியில் தமிழும் திருக்குறளும் ஏற்றமான உயரிய இடங்களைப் பெற்றன; தமிழாசிரியர்களின் நிலையும் உயர்ந்தது. இவரது ஆட்சி காலத்தில்தான் இவருடைய கடைக் கண் பார்வையினால் திருப்பதி திரு வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை எம். ஏ., எம். ஃபில். பிஎச். டி. அளவில் பெருகிச் செழிப்புடன் வளர்ந்து வருகின்றது. கருணாநிதியாகிய இவருடைய கருணை என்றுமே இத் துறையில் உண்டு என்ற நம்பிக்கை நிலையாகவே என்னிடம் உள்ளது. தமிழகத்தின் எல்லையாகத் திகழும் வட, மாலவன் குன்றத்திற்கும் தமிழுக்கும் உள்ள உறவினைக் காட்டும் இந்நூலை இவரது 52-வது அகவை நிறைவின் நினைவாக அன்புப் படையலாக்கிப் பெருமிதம் கொள்ளுகின்றேன்.” இந்த நூல் எனது இருபத்தெட்டாவது வெளியீடாகும் (ஜூலை-1975). (2) இந்த ஆண்டில் இதற்குச் சற்று முன்னதாக 22-1-73 முதல் 31-1-78 வரை நடைபெற்ற தெய்வத் தமிழ்' என்ற தலைப்பில் நடைபெற்ற பத்து நாள் பொது நிலைக் கருத்தரங்கில் வைணவ சமய நூல்கள்’ என்ற தலைப்பில் பத்தாம் நாள் ஜஸ்டிஸ் N. கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைப்பில் பேசும் வாய்ப்பு கிட்டியது. இதில் "நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்ற நூல் பற்றியே பேசப் பெற்றது; ஆய்வுக் கட்டுரை தரப் பெற்றது. (1) விரிவஞ்சி நூலாசிரியர்களின் காலம் விரிவாக ஆராயப் பெறவில்லை: கால எல்லை மட்டிலுமே குறிப்பிடப் பெற்றது. (2) நூல்களும் விரிவான திறனாய்வுக்கு உட்படுத்தப் பெறவில்லை. குறிப்பாக அவற்றின் சில சிறப்பியல்புகள் மட்டிலுமே எடுத்துக்காட்டப் பெற்றன . பேச்சின் இறுதியில் தமிழ்த் துறையினரும், அவையோரும்