பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரக் கருத்தரங்கு 荡互置 .பல வினாக்களை எழுப்பினர். அவற்றுக்கெல்லாம் இயன்ற அளவு விடைகள் தரப் பெற்றன. ஆய்வுக் கட்டுரையும் வினாக்களும் விடைகளும் நூல் வடிவம் பெற்ற தெய்வத் தமிழ் என்ற நூலில் இடம் பெற்றுள்ளன. கட்டுரை அச்சேறும் போது தட்டப் படிவத்துடன் கைப்பிடியை ஒப்பு நோக்கிப் பார்க்கப் பெறாததால் சொற்றொடர்கள், சொற்கள், சில இடங்களில் வாக்கியங்கள் விடுபட்டு -பிழை மலிந்த சருக்கமாகத் தோற்றமளிக்கின்றது. (தெய்வத் தமிழ்-சென்னைப் பல்கலைக் கழகம், 1975) குமிழி-219 63. சிலப்பதிகாரக் கருத்தரங்கு பல்கலைக் கழகங்கள் உயர் கல்வியில் கருத்தைச் செலுத்தி வரும் பொறுப்பிலிருந்தாலும் அவ்வப்பொழுது உயர்கல்வியின் ஆராய்ச்சியால் அடைந்த கருத்துகளைத் தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தினிடையே பரப்பும் பொறுப்பும் அதற்கு உண்டு.பல்கலைக் கழகத்திலுள்ள பல துறைகளிலுள்ளபேராசிரியர்களிடம்.இக்கருத்து துடிப்புடன் செயற்படவேண்டும். இன்றைய சூழ்நிலையில் இக்கருத்து செயற்பட்டு வந்தாலும், மனநிறைவு தருவதாக இல்லை. பல்கலைக் கழக மானிய ஆணையமும் கருத்தரங்குகள், விரிவுச் பொற்பொழிவுகள், தனிப்பட்ட பேராசிரியர் .கள் பல பல்கலைக் கழகங்கட்குச் சென்று சில நாட்கள் தங்கிச் சொற்பொழிவுகள்மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற திட்டங்கட்கு நிதியை வாரி வழங்கு கின்றது. நான் திருப்பதியில் பணியாற்றிய காலத்தில்