பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

教贾身 திளைவுக் குமிழிகள்-4 1970க்குப் பிறகுதான் இவ்வாறு மானியம் வழங்கும் திட்டம் ஆரம்ப நிலையில் செயற்படத் தொடங்கியது. 1974-75இல் சிலப்பதிகாரக் கருத்தரங்கு நடத்தத் திட்டமிட்டு மானியம் பெற முயன்றேன். அதற்குரிய விண்ணப்பமும் பல்கலைக் கழக மானிய ஆணையத்திற்கு. முறையாக அனுப்பி வைத்தேன். ரூபாய் 6000/- கிடைத்த தாக நினைவு..தமிழ்வளர்ச்சிக்காகத் தமிழக அரசிடமிருந்து ஊக்கு மானியம் பெற்று வரும் சில பல்கலைக் கழகங்களுள் திருவேங்கடவன் பல்கலைக் கழகம் குறிப்பிடத் தக்கது. இங்குப் பயின்று தமிழ் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி பட்டங் கள் பெறும் மாணாக்கர்கள் தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களில் படித்துப் பட்டங்கள் பெறும் மாணாக்கர்களின் தரத்தைவிட எவ்வகையிலும் சிறிதும் குறைதல் கூடாது என்ற குறிக்கோள் என் மனத்தில் நிலையாக அமைந்திருந்ததால் அத் திசையில் என் பணி சென்று கொண்டிருந்தது. இந்தக் குறிக்கோளைச் செயற் படுத்தி வந்தபொழுதெல்லாம் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டல்’ ஏழு மலையான் தான் என்னை இயக்கி வந்தான் என்பது என் அதிராத நம்பிக்கை. என்னைநன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன் றாகத் தமிழ்செய்யு மாறே' என்று சொல்லிச் சென்றார் பேரருட் செல்வர் திருமூலர். நம்மாழ்வாரும், என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால்தன்னை இன்தமிழ் பாடிய ஈசன்.” 1. திருமந்திரம்- 81 2. திருவாய் 7.9:1