பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரக் கருத்தரங்கு ・む I ? என் சொல்லால் யான்சொன்ன இன்கவி என்பித்து தன் சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,' என்று சொல்லுவார். இங்ங்ணம் அருளாசிரியர்கள் கூறி யுள்ள தெய்வத்தின் குரல்'தான் என்னை ஊக்குவித்து தமிழ்ப் பணி ஆற்றச் செய்தது; இன்றும் செய்து வருகின்றது. ரூ 3000/- கருத்தரங்கிற்காக செலவு செய்ய அனுமதி வழங்கியது பல்கலைக் கழக மானிய ஆணையம். பிப்பிரவரி யிலேயே கருத்தரங்கை நடத்திவிட முயன்றேன். சாமி வரங் கொடுத்தாலும் பூசாரி வரங் கொடுக்க வேண்டு மல்லவா? அந்தப் பூசாரி வடிவில் அமைந்தார் டாக்டர் D. சகந்நாத ரெட்டி (துணைவேந்தர்). தமிழகத்திலிருந்து மானியம் பெற்றுத் தொடங்கப் பெற்ற ஒரு தமிழ்த் துறையைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி தமிழக அமைச்சர் ஒருவரைக் கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கருதினேன். அப்பொழுது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. நாவலர் டாக்டர். W. R. நெடுஞ்செழியன் கல்வி-நிதி அமைச்சராக இருந் தார். அவரை அழைக்க நினைத்தேன். என் கருத்தைத் துணைவேந்தரிடம் தெரிவித்தேன். அவர் அதற்கு இணங்க வில்லை. தமிழ்த்துறை தொடங்குவதற்கு முன்-தமிழக அரசின் மானியம் வந்த நாள் தொட்டு (செப்டம்பர்.1989 என்பதாக நினைவு) நாவலரைத் தான் அழைக்க வேண்டும் என்று கூட்டங்களில் சொல்லிக் கொண்டிருந்த துணை வேந்தரின் உள் எண்ணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவ ரயும் அறியாமல் அவர் மனம் செயற்படுகின்றது என்பது எனக்குப் புரிந்தது. 3. டிெ. 7.9:2 كل 3 سسBE