பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

历翼4 நினைவுக் குமிழிகள்-4 இதை எழுதும் போது என்றோ உளவியல் நூல்களில் என் உள்ளத்தைப் பறிகொடுத்துக் கற்றபோது மன நிலைகளைப் பற்றிப் படித்த ஒரு கருத்து நினைவிற்கு வருகின்றது. நீண்ட காலமாக மக்கள் உளத்திலுள்ள நனவுப் பகுதியை மட்டிலுமே உளம் என்று கருதி வந்தனர். இன்று ஃபிராய்டு என்ற உளவியலறிஞர் மேற் கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இக்கருத்து முற்றி லும் மாறிவிட்டது. நனவு நிலை (Conscious level), “poorajaú sàansv’ (Unconscious level), (568 allo flanau (Sub-conscious level) araöi (pi 2-sitib gp1:L/g;&4 smtra;& செயற்படுவதாகக் கூறுகின்றார் ஃபிராய்ட். இக்கருத்தினை உளவியலறிஞர்கள் அனைவரும் ஒரு மனத்துடன் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த உளநிலைகளை விளக்குவதற்கு வில்லியம் ஜேம்ஸ் (William James) என்ற உளவியலறிஞர் ஒர் அரிய உவமையைக் கையாளுகின்றார், வட பெருங்கடலி னின்றும் (Arctic Ocean) பெரும் பனிக்கட்டி மலைகள் விடுபட்டு அட்லாண்டிக் மாபெருங் கடலில் புகும். இம்மலைகளின் கொடுமுடிகளின் எட்டில் ஒரு பகுதியே புறத்தே புலனாகும். பனிகட்டி மலையொன்றினை முழு உளத்துடன் ஒப்புமைப் படுத்திக் கூறும் பொழுது சிறிதளவு தோன்றும் கொடு முடியை நனவு உள்ளத்தோடு ஒப்புமை கூறலாம். அங்ங்ணம் நிலையாகத் தோன்றிக் கிடக்கும் பகுதிக்குக் கீழேயுள்ள சிறு பகுதி சுற்றியுள்ள அலை வீச்சினால் ஒரளவு தோன்றியும் வரும். இதனை நனவடி உளத்துடன் ஒப்புமை கூறலாம். இதற்குக் கீழாகப் பெருமலைபோல் கிடக்கும் பகுதி தாக்கினால் பெருங் கப்பல்களும் அச்சுவேறு ஆணிவேறாகக் சிதையக் கான் இன்றோம். இதனை நனவிலியுளத்திற்கு ஒப்பிடலாம். நனவு உளம் முழுஉளத்தில் கோடியில் ஒரு பங்கே என்றும் கூறிவிடலாம். புறக்காற்றாலும் பிறவற்றாலும் இந்தப் பனிக்கட்டி மலை தலைகீழாகப் புரளுவதும் உண்டு. அது