பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரக் கருத்தரங்கு 5 I 5 போலச் சில சமயம் நனவிலியுளமும் நனவு உளமாக மாறுவதும் உண்டு. இத்தகைய உளமாற்றம் சிறுகச் சிறுகவும் எழலாம்; திடீர் என்றும் நேரிடலாம். எப்படிப் பனிக்கட்டி மலையில் (Ice-berg) பெரும்பகுதி புறத்தே புலனாகாமல் நீரின் அகத்தே ஆழ்ந்துள்ளதோ, அதே போன்று நனவிலியுளமும் உள்ளே ஆழ்ந்துள்ளது. எங்ஙனம் புறத்தே புலனாகும் பனிக்கட்டி மலைக்கு நீரின் அகத்தே ஆழ்ந்துள்ள பகுதி அடிப்படையாக உள்ளதோ அங்ங்னமே நனவிலி உளமும் நனவு உள்ளத்திற்கு அடிப் படையாக உள்ளது. புறத்தே தோன்றும் பனிக்கட்டி மலையின் பகுதியும், நீரில் ஆழ்ந்து கிடக்கும் அதன் அடிப் பகுதியும் ஒரே மலையின் இரு பகுதிகள் என்பது வெளிப்படை. அங்ங்னமே நனவு உளமும் நனவிலியுளமும் ஒரே உளத்தின் இருபகுதிகளாகும் என்பது கருதத்தக்கது. இந்தக் கருத்தின் அடிப்படையில் துணைவேந்தரின் உளத்தைக் காண என் மனம் எண்ணியது. தொடக்கக் காலத்தில் நாவலரை ஆதரித்த அவர் உளம் அவரது இரண்டாவது காலத் துணைவேந்தர் பதவியின்போது நாவலரை ஆதரிக்காததற்குக் காரணம் என்ன? தெலுங்கு மொழி பேசுபவராகவும் தெலுங்கு மொழி பயின்றவராக வும் உள்ள டாக்டர் ரெட்டி தமிழகத்தில் பிறந்தவர்; வளர்ந்தவர்: மருத்துவக் கல்வி (M.B.B.S) பயின்றவர். அவரது மனநிலை, மனப்பான்மை தமிழ்ப் பண்பாட்டை யொட்டியிருந்தது. இரண்டாம் உலகப்பெரும் போரின் போது போர்த்துறையில் சேர்ந்து பணியாற்றியவர். சில ஆண்டுகள் கழித்துத் திரும்பி மீண்டும் மருத்துவக் கல்லூரி யில் சேர்ந்து M.D. (Pathology) பயின்றவர் (சென்னையில்). போரில் பணியாற்றிய சலுகையினால் விசாகப்பட்டினம், குண்டுர் மருத்துவக் கல்லூரியில் சில ஆண்டுகள் பணியாற்றித் தம் திறமை, நேர்மை, ஒழுங்கு முறை இவற்றை நிலை நாட்டியவர். புதுச்சேரியில் மைய அரசு சவகர்லால் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம்