பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎五郡 நினைவுக் குமிழிகள்.4 தொடங்கினபோது இவருடைய திறமை முதலியவற்றுடன் போர்ப் பணி அநுபவம் கைகொடுத்து உதவியதால் அதன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அதன் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் அரும்பாடுபட்டு உழைத்தார். ஆந்திரத்தில் பணியாற்றியபோது சில அரசியல் வாதிகள், பெரியவர்கள் இவர்கள் நட்பினைப் பெற்றிருக்கலாம், இவரது திறமையும் நேர்மையும் அவர்களின் கருத்தைக் கவர்ந்திருக்கலாம். இதனால் துணைவேந்தர் பதவி திருப்பதியில் கிடைத்தது. அதனை அற்புதமாக வகித்து. அரும் பணியாற்றினார். இக்காலத்தில் அவர் தம்மை ஆந்திரர் என்று காட்டிக் கொள்ளும் போக்கில் அரசியல் வாதிகள் பேசும் பாணியில் பேசி வருவதை என்னால் காண முடிந்தது. கால தேச வர்த்தமானத்தின் காரணமாகப் புதிய துறைகள் நான்கையும் (தமிழ்த்துறை உட்பட) ஆந்திர அமைச்சர் ஒருவர் திறந்து வைத்தார். இக்காலத்தில் சில அரசியல் வாதிகளின் விருப்புக் கானத் திற்குச் சரியாகத் தாளம் போடாது நேர்மையான போக்கில் செயற்பட்டதால் அவர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். முதலில் துணைவேந்தர் பதவி சிரமம் இல்லாமல் வந்தது. இரண்டாவது காலப் (மூன்றாண்டுகள்) பகுதியில் அது கிடைக்க பகீரதப்பிரயத்தனம் செய்ய வேண்டி யிருந்தது. திரை மறைவில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளைப் பல்கலைக் கழகப்பேராசிரியர்களும்பிறரும் கிசுகிசுத்தது: என் காதிற்கும் எட்டியது. இப்போது தெலுங்கர்களை அதிகமாகப் போற்றவில்லை; அவர்கள்மீது அன்பும். இல்லை என்பது அவரது நடவடிக்கைகளால் புலனாயிற்று அவரது நனவிலியுளத்தில் என்ன எண்ணம் ஓடியது என்பதை டாக்டர் மாத்ருபூதம் என்ற (அண்ணாநகர்) உளவியல் மருத்துவரால்தான் உறுதி செய்ய முடியும். இந்தக் குழப்ப நிலையிலிருக்கும்போதுதான் நாவலரை அழைக்க இணங்காதிருந்தார். நானும் பொறுமையாகத்