பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரக் கருத்தாங்கு 517 தேதிகளைத் தள்ளி வைத்துக் கொண்டே அவர் படம் எடுத்து ஆடியதற்கேற்ப மகுடி ஊதி என் கருத்துக்கு இணங்க வைத்து நாவலரை அழைக்க இசைவு பெற்றேன். சென்னைக்கும் காவடி எடுத்து நாவலரை இணங்கவைத்தது பெரும் பாடாய்ப் போய் விட்டது, அவரைக் கொண்டுக் கருத்தரங்கைத் தொடங்குவது என்பது உறுதியாயிற்று. பல்கலைக் கழகத்தில் எந்த நிகழ்ச்சியானாலும் திருப்பதியில் என் அரிய நண்பர்களான பேராசிரியர் G. லீலாகிருஷ்ணன் (தாவர இயல்துறை-கோவிந்தராஜ சுவாமி கலைக்கல்லூரி), திரு. A. நடராஜன் (இயற்பியல் துறை-வேங்கடேசுவரா கலைக் கல்லூரி) இவர்களைக் கலக்காமல் எந்த முடிவுக்கும் வருவதில்லை. இளங்கோ அடிகளின் படத்தைத் திறந்து வைத்து அப்பெருமானின் இதயத்தைத் திறந்து காட்டும் பாங்கில் அரியதொரு சொற்பொழிவு நிகழ்த்தவும் ஒருவர் வேண்டுமே என்று என் நண்பர்களிடம் சொல்ல அவர் டாக்டர் W.C. குழந்தை சாமியின் (இயக்குநர் தொழிற் கல்வி, தமிழ் நாடு) பெயரைச் சொல்ல அவருக்கு ஒரு திங்களுக்கு முன்னரே எழுதி ஒப்புதல் பெற்றேன். கருத்தரங்கின் அடிப்படைக் கருத்தை விளக்கும் பாங்கில் சொற்பொழிவு (Key-note address) நிகழ்த்த என் அரிய நண்பர் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியம் (இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, அடையாறு) அவர்களின் இசைவு பெற்றேன். மூன்று நாள்கருத்தரங்கில் திறப்பு விழா போக ஐந்து அமர்வுகட்கு 25 பேராசிரியர்கள் (அமர்வு ஒன்றுக்கு ஐந்து பேர் வீதம்) கேரளம், ஆந்திரம், தமிழகம், கர்நாடகம் பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொள்ள முடிவுசெய்தேன். ஏப்பிரலில் (1975) கருத்தரங்கு அற்புதமாக நடை பெற்றது. இதனால் பல துறைப் பேராசிரியர்களின் பாராட்டுதலையும் பெற்றேன். முதல் திறப்பு விழா நிகழ்ச்சிகளை ஆங்கிலத்திலேயே நடைபெறச் செய்த