பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎夏茂 நினைவுக் குமிழிகள்-4 தால் பேரவை மண்டபம் வழியும் நிலையில் கூட்டம் கடியது . இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்த மாகும். டாக்டர் W.C. குழந்தைசாமியைத் துணை வேந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது அவர் அந்த அறிமுகத்தைச் சுவைக்கவில்லை' என்பது அவர் முகத்தில் தெரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியு மன்றோ? டாக்டர் W. C. குழந்தைசாமியின் உரை அற்புதமாக அமைந்தது; ஆராய்ச்சிக் கருத்துகள் நிரம்பி வழிந்தன. பேச்சின் பளிச்சிட்ட சொல்வளம் (Diction), வாக்கிய அமைப்பு, ஆங்கிலத்தை மிக எளிதாகக் லாவக மாகக் கையாண்ட முறை இவை யாவும் ஆங்கிலப் பேராசிரியர்களே மூக்கில் விரலை வைத்துப் பாராட்டும் முறையில் அமைந்தது. பேச்சு முடிந்து டாக்டர் V, C. குழந்தைசாமி இருக்கையில் அமரும்போது துணை வேந்தர் அவர் கையைக் குலுக்கின போது, அவர் கையையே தனியாகப் பிரித்து விடுவார் போலிருந்தது; அவ்வளவு வலிவுடன் குலுக்கினார். டாக்டர் குழந்தை சாமியின் பேச்சு தனிச் சிறப்புடன் திகழ்ந்ததை அனை வருமே பாராட்டினர். நான் டாக்டர் குழந்தை சாமியைத் துணைவேந்தருக்கு அறிமுகம் செய்தபோது சாதாரண மாக மலராது இருந்த அவரது முகம் பேச்சு முடிந்த போது மலர்ச்சியுடன்-ஒளியுடன்-ஒளிர்வதைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றாகப் பேசும் துணைவேந்தரின் மனம் நன்றாகப் பேசின டாக்டர் குழந்தைசாமியின் பேச்சால் ஈர்க்கப் பெற்றதில் வியப்பில்லை. பாம்பின் கால் பாம்பறியுமன்றோ? .