பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-220 64. ஆசிரியர் நியமனத்தில் சில முறை கேடுகள் உள்ளத் தூய்மையும் நிர்வாகத் திறமையும் மிக்க டாக்டர் சகந்நாத ரெட்டியின் காலத்தில் அதிகமாகத் துன்பப்பட்டவன் அடியேன். இதை ஏழுமலையான் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். பல்கலைக் கழக வாழ்க்கையை ஒரு தவ வாழ்க்கையாகக் கொண்டு செயற் பட்டதால் இத்தொல்லைகளையெல்லாம் தாங்குவதற் கேற்ற ஆற்றலை நல்கி என்னை உய்வித்தான் என்பதை இன்று நினைந்து பார்க்கின்றேன். துன்பப்பட்டது என் நுகர்வினையால் (பிராரத்தத்தால்) வந்தது என்ற உண்மையையும் அவனே என்னை உணரச் செய்ததால் என்னிடம் தாக்குப் பிடிக்கும் ஆற்றலும் வளர்வதற்கு அதுவே காரணமாயிற்று. துன்பப் படும்போதெல்லாம் அதையும் இறையரு ளாகக் கொள்வேன். வள்ளுவப் பெருந்தகையும் எனக்கு வழி காட்டுவான். ‘தவம்’ என்ற அதிகாரம் துறவியலில் உள்ளது. தவக் கோலம் கொண்டு துறவிகள் வாழ்வதைக் கண்டு, 'தவம் நமக்கு உரியது அன்று, துறவிகளுக்கே அது. முடியும்' என்று இல்லறத்தார் விட்டு விடுகின்றனர்; இது தவறு. தவம் எல்லோருக்கும் பொதுவானது: இல்லற வாழ்க்கையிலிருந்தே தவம் செய்ய முடியும்; சிலர் குடும்ப வாழ்க்கையைத் துறந்தே செய்ய முடியும். உண்மை இவ்வாறு இருக்க, இல்லறத்தார் தவத்தை மறப்பதற்குக் காரணம் என்னவோ? துறவிகளுக்கு உணவு முதலிய வற்றை உதவுவதே தம் கடமை என்று தவத்தைத் துறந்