பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛越0 - நினைவுக் குமிழிகள்.4 தார்க்கே உரியதாக்கி விட்டு ஒருகால் மறந்திருக்கக் கூடுமோ? இல்வாழ்க்கையிலும் பகைவரை அடக்கித் திருத்துவதற்கும் நண்பரை மதித்து உயர்த்துவதற்கும் ஆற்றல் வேண்டுமல்லவா? அந்த ஆற்றல் தவத்தால்தான் கிடைக்கும். விரும்பியவற்றை விரும்பியவாறே பெறக் கூடிய தன்மை இருப்பதால், செய்வதற்கு உரிய தவத்தை இல்வாழ்க்கையிலும் முயல வேண்டும். தமக்கு உரிய கடமைகளை வழுவாது செய்தாலும், இறைவன் நமக்கு வழங்கியுள்ள பொறுப்புகளை விருப்பு வெறுப்பின்றி செய்து வந்தாலும் அதுவும் தவம் என்றே கொள்ளப் பெறும். தமக்கு வரும் துன்பத்தையெல்லாம் பொறுப்பதும் ஒருவகைத் தவமேயாகும். ஆனால், துன்பம் மேன்மேலும் வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது? துன்பம் மேன் மேலும் வந்து வருத்த வருத்த தவம் சிறந்து விளங்கும்: அது சுடச்சுட மாசு நீங்கி ஒளிவிடும் பொன் போன்றது. சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோக்கிற் பவர்க்கு." என்பது வள்ளுவர் வாய்மொழி. இஃது என் வாழ்க்கையில் கண்ட உண்மை: பேருண்மை. நான் திருப்பதியில் அநுபவித்த தொல்லைகளையும் துன்பங்களையும் தவ மாசுக்கொண்டு பணியாற்றியதால் இறைவன் எனக்கு எதையும் தாங்கும் இதயத்தையும் நல்கியுள்ளான். இப் படியே பணி செய்து கொண்டு எஞ்சிய வாழ்க்கையையும் முடித்துக்கொண்டு திடீரென்று ஒருநாள் ஆவி பிரிய நேர்ந்திருக்குமாயின் அதுவே கிடைத்தற்கரிய என் பேறாக முடியும். எல்லோரும் இப்படி நினைத்துக் கொள்ளலாம்; வாயாலும் பேசலாம். ஆனால் மனச்சான்று என்ற ஒன்று உண்டு; அதுவே அந்தர்யாமியாக நம்முன் கோயில் கொண்டிருக்கும் இறைவன். அவனை ஏமாற்றமுடியாது. 1. குறள்-267 (தவம்)