பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்கள் நியமனத்தில் சில முறை கேடுகள் 莎荔了 வஞ்ச மனத்தான் பற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்." என்பது வள்ளுவர் வாக்கு. இந்த உண்மைகள் எல்லோர்க் கும் தெரியும். ஆனால் செல்வச் செருக்கு, அதிகாரசி செருக்கு இவை ஆணவ மலமாகப் புரிணமித்து (இல்லை, ஆணவமலமே இவ்வாறு செருக்குகளாகப் பரிணமித்து) தகாத செயல்களில் நம்மை உட்படுத்தும். இந்த ஆனவ மலத்தின் ஆற்றலை தூய்மையான உள்ளத்தில் எழும் பக்தியால் குறைக்கலாம்; குறைத்து விடவும் முடியும். இந்த எண்ணங்களின் பின்னணியில் இயற்பியல் துறை யில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைக் கருதலாம். இயற்பியல் துறையில் பேராசிரியர் பீம்சேனாச்சார் ஒய்வு பெற்றார். அந்த இடம் நிரப்பப் பெற வேண்டியிருந்தது. பொது வாகப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்கள் பதவிகள் காலி யாகும்போது எல்லாத் துறைகளிலுமுள்ள காலியிட விவரங்களை அறிந்து ஒட்டுமொத்தமாக விளம்பரம் செய்வதுதான் முறை. இதுவே நடை முறையிலும் இருந்து வந்தது. இன்னும் பல துறைகளில் பேராசிரியர் பதவிகள் காலியாகத்தான் இருந்தன. இவற்றைக்கருத்தில் கொள்ளாது இயற்பியல் பேராசிரியர் பதவியை மட்டிலும் விளம்பரம் செய்தார் துணைவேந்தர். இரண்டு பத்தி களைச் சேர்த்துப் பெரிய எழுத்துகளில் விளம்பரம் வந்தது. துறையிலேயே இருவர் பதவிக்குத் தகுதியுடையவர்களாக இருந்தனர். ஒருவர் டாக்டர் P ஜெயராமரெட்டி: மற்றொருவர் டாக்டர் S.V. இலட்சுமணன். இந்த நியமனம் நியாயமாக நடைபெறவில்லை என்பது வெள்ளிடை மலை. பேட்டி நடந்த மறுநாளே ஆட்சிக் குழுக் கூட்டம் வைத்துக் கொள்ளப்பெற்றது. டாக்டர் இலட்சுமணன் 2. குறள்-271 (கூடா ஒழுக்கம்)