பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慕22 நினைவுக் குமிழிகள்-4 ரிட் வழக்கு போட ஐதரபாத் சென்றார்; வழக்கும் போடப்பட்டது. ஆட்சிக்குழுவின் நிகழ்ச்சி நிரலின் முதற் பொருள் இயற்பியல் துறை பேராசிரியர் நியமனம் என்பது கூட்டத்தில் இந்தப் பொருள் முடிவு செய்யப்பட்டதும் டாக்டர் ஜெயராம ரெட்டி நியமிக்கப் பெற்றதாக ஆணை தட்டச்சு செய்யப்பெற்று பதிவாளர் கையெழுத்தாகி ஜெயராம ரெட்டியின் கைக்குக் கிடைக்கச் செய்து அவரும் பணியில் சேர்ந்து விட்டார். எந்தப் பல்கலைக் கழகத் திலும் இப்படி நியமனம் நடைபெற்றிராது. உலகம் கேட்டி ராத முறை இது, ஆணவத்தின் கொடு முடியில் நடை பெற்ற செயல் இது வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற வழக்காகி விட்டது. இந்தநிேகழ்ச்சியில் டாக்டர் ஜெயராம ரெட்டி பேராசிரியர் பதவிக்கு தகுதியற்றவர் என்பது அல்ல; முற்றிலும் தகுதியுடையவரே, மேற்றொரு வரும் தகுதியுடையவரே! மரபுப்படி, பதற்றமில்லாமல், இயல்பாக நடை பெற்றிருந்தால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். அரசியல்வாதிகள் கூட இத்தகைய நீதிக்குப் புறம்பான செயலில் இறங்கியிருக்க மாட்டார்கள் என்பது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முதிய பேராசிரியர் களின் கருத்து. இயற்பியல் பேராசிரியரை மட்டிலும் அவசரமாக நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எல்லா ஆசிரியர்களின் நியமனத்துடன் இதையும் சேர்த்திருக் கலாம். எந்தத் துறையிலும் இம்முறையில் நியமனம் நடை பெறவில்லை.இதில் பதிவாளர் துணைவேந்தருக்குவேண்டி யவர்: ஆட்சிக்குழுவில் பலர் டாக்டர் ஜெயராம ரெட்டிக்கு வேண்டியவர்கள். இந்த நியமன நாடகத்தில்-இசைக் கச்சேரியில்-பாட்டு, ராகம், தாளம், ஸ்துதி முதலிய வற்றை முன்னரே சரிப்படுத்திக் கொண்டு நடத்தி முடித் தனர். துரியோதனாதியர் அன்று நடத்திய பல செயல் களை ஒத்தது இது.