பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகிரியர்கள் நியமனத்தில் சில முறைகேடுகள் 52 リ பொதுவாக ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்று தீர்மானங்களை தட்டச்சு செய்து, சரி பார்த்து. பல படிகள் எடுக்கச் செய்து ஆட்சிக் குழுவினர் ஒவ்வொரு வருக்கும் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகட்கும் அனுப்பிய பிறகு ஆசிரியர் நியமனப் பிரிவிலிருந்து ஆணை கள் தயாரிக்கப் பெற்று உரியவர்கட்கு அனுப்பப்பெறும். இதற்குக் குறைந்தது 15 நாட்கள் ஆகும். இந்த மரபுப்படி. நடைபெறவில்லை. இந்த நியமனத்தில் செயல்கள் யாவும் காய்ச்சல் வேகத்தில் (Feverish thaste) நடைபெற்றன. பல்கலைக் கழக நிர்வாகத்தில் மக்களுக்கு நம்பிக்கை யில்லாத நிலைமையை ஏற்படுத்தி விட்டார் துணை வேந்தர். இந்த அதிர்ச்சி தரும் நடவடிக்கையில் ரிட். விண்ணப்பம் போட்ட டாக்டர் இலட்சுமணன் ரிட் மனுவைத் திரும்பப் பெற்று கொண்டது சோக நாடகக் (Melodrama) களை தட்டும்படி செய்து விட்டது. இது பல்கலைககழக வளாகத்திலேயே இலட்சுமணன் கோழை யாகக் காட்சி அளித்தார். பலர் அவரை மனுவைத் திரும்பப் பெற்றதற்குக் காரணம் கேட்டபொழுது எதிர் காலத்தில் வரும் வாய்ப்பிலும் துணைவேந்தர் தடையாக இருந்தால் என்ன செய்வது? என்றாராம். எண்ணித் துணி யாத இத்தகையோரை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். டாக்டர் தாமோதரன் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பதினோராண்டுகள் பணி செய்தது உண்மைதான். அங்கு தமிழ் எம்.ஏ , எம். ஒ. எல் வகுப்பு கள் நடைபெற்றன என்பதும் உண்மையே. அங்குச் சுமார் இருபத்தைந்து ஆசிரியர்கள் தமிழ்த்துறையில் பணியாற் றினர் என்பதும் நான் அறிந்ததே. இவர் பி. யு. சி. பி.ஏ. வகுப்புகள்தான் கற்பித்திருக்கவேண்டும்; எம். ஏ. வகுப்பு கள் கற்பிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திராது. அநுபவமுள்ள பழம் பெரும் புலவர்கள்தாம் அவ்வகுப்பு கட்குக் கற்பித்திருக்க வேண்டும் என்பது என் மனத்தில் படவில்லை. இந்த எண்ணம் என் மனத்தில் தோன்றி இருந்தால் இதைச் சோதித்து அறியவேண்டும் என்று ஒரு