பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்கள் நியமனத்தில் சில முறை கேடுகள் 等多莎 இவரைப் பேராசிரியராகத் தேர்ந்தெடுத்தது. ஆனால் ஆறு திங்கள் கழித்துதான் (அதாவது பத்தாண்டு. அநுபவம் பெற்ற பிறகுதான். இவருக்குப் பேராசிரியர் பதவிக்கு ஆணை அனுப்பப் பெற்றது. டாக்டர் டி. சகந்நாத ரெட்டி மருத்துவராதலால் தாய் மகப்பேறு அடைவதற்குப் பத்துத் திங்கள் நிறைவு பெறவேண்டும் என்பதை நன்கு அறிந்தவராவார். இதனைப் பேராசிரியர் பதவிக்குஎம்.ஏவகுப்புக்குக்கற்பிக்கும் பத்தாண்டு.அதுபவம் நிறைவுபெற்றிருக்க வேண்டும் என்று கருதினார் போலும்! சில வாரங்கள் குறைவாகக் குறை மாதப் பிரசவத்தால்" பிறக்கும் குழவிகளும் உயிர் வாழ்கின்றன என்பதையும் இவர் அறிந்திருக்க வேண்டும். ஒன்பதரையாண்டுகள் அநுபவம் பெற்ற டாக்டர் வி.எம். ரெட்டியை நியமித் திருந்தால் என்ன கெட்டுப் போகும் என்பது அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்! ஆறு திங்களில் அவர் சாதித்தது என்ன என்பதும் அந்த வேங்கடக்குன்றின் மேலிருப்பவனே அறிவான் இப்படியெல்லாம் நினைத்தவர் பேட்டிக்கே அனுமதித் திருக்கக் கூடாது. என் நியமனத்தில் பேட்டிக்குக் கடிதம் அனுப்பாமல் அல்லவா தொல்லை கொடுத்தார்? மற்றொரு துறையில்-அதாவது வணிகத்துறையில்நடந்த வல்லுநர் குழு முன்னர் நடைபெற்ற பேட்டியில் பத்தாண்டுகள் எம்.ஏ. வகுப்புக்குச் கற்பித்த அநுபவம் பத்தாண்டுகள் நிறைவு பெற்றவர்- சில ஆண்டுகள் முதல்வராகவும் இருந்தவர் டாக்டர் ஒ. ஆர். கிருஷ்ணசாமி என்பவர். பேராசிரியர் பதவிக்கு வந்த இவரை மடக்கி இரண்டாண்டுகள் பல்கலைக் கழக அநுபவமாவது இருக்க வேண்டும் என்று கூறித் துணைப்பேராசிரியராக நியமனம் செய்தார் துணைவேந்தர். அவரும் இரண்டாண்டுகள் நிறைவு பெறுவதற்கு முன்னர் பெங்களுர்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் டீன்' (Dean) ஆகவும் நியமனம் பெற்று வெளியேறிவிட்டார்.