பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நினைவுக் குமிழிகள்-A, ஆணையின்படி இவர் திரும்பவும் அழகப்பச் செட்டியார் பயிற்சிக் கல்லூரியில் வந்து பணியேற்கவேண்டியது: இதற்கு விருப்பம் இல்லாவிடில் மூன்று மாத ஊதியத்தை நிர்வாகத்திற்குக் கட்டவேண்டியது.' என்பதாக. கடிதம் என்னைத் திடுக்கிடவைத்தது. மனம் குழம்பிச் செயலற்ற நிலைக்குத் தள்ளப் பெற்றது. திரும்பவும் காரைக்குடிக்குப் போக விருப்பம் இல்லை. மூன்றுமாத ஊதியத்தைக் கட்டவேண்டுமா? வழக்குத் தொடங் கலாமா? ராய. சொ. சா. க இவர்கட்குக் கடிதம் எழுதி ஆணையை மாற்றச் செய்யலாமா?’ என்று என் மனம் எண்ணியது. ஒரு நாள் துணைவேந்தரைக் காலையில் சந்தித்து இந்தச் செய்தியைக் கூறி செய்ய வேண்டியது. பற்றி யோசனை கேட்டேன். இந்தச் செய்தியைச் சொன்னவுடனே அவர் நகைத் தார். "மிஸ்டர் ரெட்டியார், இந்த இரண்டாவது ஆணை நகைப்பிற்கிடமாக உள்ளதே. வள்ளல் தோற்று வித்த புகழ் பெற்ற நிர்வாகம் துக்ளக் ராஜ்யமாகவா போய்விட்டது? மூன்று மாத ஊதியம் அனுப்பாதீர்கள். அவர்களால் இரண்டு ஆண்டிற்கு ஒன்றும் செய்ய முடியாது. இரண்டாண்டு கழித்து பணம் கட்டுவதும் கட்டாதிருப்பதும் பற்றி யோசிக்கலாம்' என்றார். திரு. C V, C T. W. வேங்கடாசலம் செட்டியாரின் மனம் ஏன் மாறியது? சிறந்த நிர்வாகத் திறமையுள்ளவ ராயிற்றே. இது மணியனது கைங்கரியமாக இருக்குமோ? முன்னர்தான் என்னை ஒன்றும் செய்ய இயலவில்லை. பலமான பின்னணி இருந்தது. இப்பொழுது கல்லெறிந்து பார்க்கலாமா?' என்று செட்டியாரைப் பிரபத தி' செய்து இந்தப் புதிய ஆணை பிறப்பிக்கக் காரணமாக இருந்தாரா என்று யோசித்து அதுதான் முடிவு என்று தீர்மானித்தேன். துணைவேந்தரிடம், வீண் விவகாரம் செய்து மன அமைதியைக் குலைத்துக் கொள்ள விரும்ப