பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 நினைவுக் குமிழிகள்-4 உளவியல் துறையிலும் விலங்கியல் துறையிலும் இத்தகைய *வேடிக்கைகளை நடத்திக் காட்டினார். துணைவேந்தர். புள்ளியியல் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. உள வியல் துறையில் பேராசிரியர்எஸ்.கோவிந்தராஜுலுகாலத் தில் மேஜர் பார்த்தசாரதி என்பாரை (இவர் போர்ப் பணி யாற்றித் திரும்பியவர்), டாக்டர் பட்டம் பெறாதிருந்தும், அவருடைய தகுதியையும் திறமையையும் அளந்தறிந்து அவரைப் பேராசிரியர் பதவிக்கு உயர்த்தியிருந்தார். அவர் ஒய்வு பெற்றதும். அத்துறையில் பல ஆண்டுகள் விரிவுரை யாளராகவும் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றித் திறமை மிக்க டாக்டர் எஸ். நாராயணராவுக்குப் பதவி உயர்வு தாராமல் இழுபறியாக வைத்திருந்தார் டாக்டர் ரெட்டி. இதனால் டாக்டர் எஸ். நாராயணராவ் மனம் உடைந்து போனார். இதய நோயால் தாக்கப் பெற்று சில மாதங்கள் படுக்கையாகக் கிடந்தார். துணைவேந்தர் டாக்டர் ரெட்டி இதை அறிந்தார். உடல்நோய்களைத் தெரிந்து கொள்ளும் அறிவு படைத்தவர்-இவர் நோய்க் கூறு மருத்துவர் (Pathologist) உளநோய்க் கூறுகளையும் ஒரளவு அறிந்திருக்கவேண்டும். வாழ்க்கையில் நல்ல அதுபவம் மிக்க அறிஞர்களும் இத்தகைய நிகழ்ச்சிகளைக் கண்ணுறுங் கால் இவற்றின் மூலகாரணத்தை நன்கு அறிய முடியும்போது மருத்துவத் துறை அறிஞருக்கு இதனை அறிய முடியவில்லை என்று சொல்லுவதற்கில்லை. அறிந்து கொண்டார்; இல்லம் சென்று டாக்டர் ராவைப் பார்த்து வந்தார் என்றும் கேள்விப்பட்டேன். சில திங்களில் டாக்டர் ராவுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. உள்ளம் திருப்தி அடைந்தது; நோயும் நீங்கி விரைவில் குணம் அடைந்தார். மனத் திண்மை இல்லாதவர்கள் சிறிய அதிர்ச்சியாலும் மனம் உடைந்து போவர் என்பதற்கு டாக்டர் நாராயணராவ் ஓர் நல்ல எடுத்துக் காட்டாக அமைகின்றார். விலங்கியல் துறையில் இவர் மேற்கொண்ட முறை மிகவும் அடாதது. இத்துறையில் பல்லாண்டுகள்