பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்கள் நியமனத்தில் சில முறை கேடுகள் 527 உழைத்து டாக்டர் பட்டமும் பெற்றுத் துணைப் பேராசிரி ராகப் பணியாற்றிய டாக்டர் கே. எஸ். சுவாமிக்கும் பதவி உயர்வு கொடுக்கவில்லை. ஒன்றிரண்டு ஆண்டுகள் மூதறிஞர் பட்டப் படிப்பு மாணாக்கர்கட்குக் கற்பித்த அதுபவம் பத்தாண்டுகள் நிறைவு பெறவில்லை என்ற காரணமே டாக்டர் சாமியின் பதவி உயர்வுக்குத் தடை யாக இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு மேல் சென்னைப் பல்கலைகழகத்தில் ஒய்வு பெற்ற டாக்டர் கிருஷ்ணன் என்பவரைப் பேராசிரியராக (இரண்டாண்டு ஒப்பந்தத் தில்) கொணர்ந்தது துறையிலுள்ளார் அனைவருக்குமே வயிற்றெரிச்சலை விளைவிப்பதாக இருந்தது என்றால் துறைத் தலைவராகத் தொடர்ந்து இருந்து பேராசிரியர் பதவியை அவாவி நிற்கும் துணைப் பேராசிரியர் டாக்டர் கே. எஸ். சுவாமியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகித்துதான் அறிந்துகொள்ளவேண்டும். இறையருளால் டாக்டர் சுவாமியின் மனம் தளரவில்லை; திடசித்தத்துடன் பணியாற்றினார். டாக்டர் சுவாமி சிறந்த ஆய்வாளர். நல்லாசிரியர், நல்ல உழைப்பாளி என்பவற்றையெல்லாம் துணைவேந்தர் டாக்டர் ரெட்டி அறியாதவரல்லர். இரண்டாண்டுகள் கழித்து டாக்டர் சுவாமிக்குப் பேராசிரியர் பதவி கிடைத்தது. டாக்டர் கிருஷ்ணனைக் கொணராமல் உளவியல் துறையில் டாக்டர் நாராயணராவைத் துறைத் தலைவராக வைத் திருந்ததைப் போலவே, டாக்டர் சுவாமியையும் துறைத்தலைவராகவாவது வை த் தி ரு ந் தி ரு க் கலாம், டாக்டர் கிருஷ்ணனின் இரண்டாண்டுப் பிரவேசத்தால் துறையில் என்ன வளர்ச்சி ஏற்பட்டது என்பதற்கு அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்! 3. டாக்டர் சுவாமி இன்று இல்லை. இரண் டாண்டுக்கு முன்னர் (1988) தற்கொலை செய்து கொண்டதாக செ ய் தி த் தா ள் க ள் மூலம் அறிந்தேன்.