பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$$8 நினைவுக் குமிழிகள்.4 திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் எம், இராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு விரிவுரையாளர் இங்கேயே எம். ஏ. வகுப்பிற்குக் கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் கற்பித்த அநுபவம் இவருக்கு இருந்தது. இவர் துணைப்பேராசிரியர் (Reader) பதவிக்கு விண்ணப்பித் திருந்தார். தனிச் சிறப்புக்கூறு (Specialization) பற்றி ஏதோ ஐயத்தை எழுப்பிக் கொண்டு (துறைத்தலைவர் பிம்பசேனாச்சாரின் கைங்கரியம் இது) இவருக்கு பேட்டியே மறுக்கப்பட்டது. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுக்குள் சென்னைப் பல்கலைக் கழகக் கோவை மையத்தில் இவர் விரிவுரையாளர் பதவியிலிருந்து நேராக பேராசிரியர் பதவியில் நியமனம் பெற்றார்: பேராசிரியர்க்குரிய ஊதியத் திட்டத்திலும் இரண்டு உயர்வுப் படிகளையும் (increments) பெற்றது எல்லோரையும் வியக்க வைத்தது. தாமரைச் செல்வர் நெ.து. சுந்தரவடிவேலு காலத்தில் இது நடை பெற்றது குறிப்பிடத்தக்கது. டாக்டர் சகந்நாதரெட்டி பதவியைவிட்டு விலகு. வதற்கு முன்னர் போட்ட திட்டம் இறையருளால் பயனற்றதாய்ப் போய் விட்டது. இறையருள் தான் இத்திட்டத்தைக் குலைத்து திட்டமிட்டவரையும் திட்டத் திற்குள் உட்படுத்தப்பட்டவர்களையும் காத்ததுகண்ணன் பஞ்ச பாண்டவர்களை ஒரு நெருக்கடியான நிலையில் காத்தது போல. உவமையை விரித்து விளக்கி னால் நன்கு தெளிவாகும் அவசர காலநிலை: (Emergency) நிலவின சமயம், துணைவேந்தர் முதல்வரை தத்துவத்துறைத் துணைப்பேராசிரியர் ஹெர்பர்ட், மானிட இயல் துணைப்பேராசிரியர் முனிரத்னம்ரெட்டி, தமிழ்த் துணைப்பேராசிரியர் துறைத் தலைவர் டாக்டர் AB « சுப்புரெட்டியார் இந்தித்துறைப் பேராசிரியர் டாக்டர் S. T. நரசிம்மாச்சாரியார் ஆகிய நால்வரை யும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்வதற்குப் பரிந்துரைக்குமாறு கேட்க அவரும்அவ்வாறேசெய்தாராம்;