பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 நினைவுக் குமிழிகள்.4 லொணாத் துயரத்தை அனுபவித்த நல்லவர்களில் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவியும், சென்னை மாநிலக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மெ. சுந்தரமும் அடங்குவர். காங்கிரஸ் ஆட்சிக்கு அடுத்து பதவியேற்ற ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் இத்தகைய 'அழுக்குகள்’’ போக்கப்பெற்றன, பாரதப் போரின் இறுதியில் அசுவத்தாமன் செய்ய இருந்த தீச்செயலினின்றும் பாண்டவர்களைக் காத்தான் கிருஷ்ணன். அதுபோலவே ஜகந்நாத ரெட்டிபுரிய இருந்த தீச்செயலினின்றும் ஐவரையும் கிருஷ்ணராவ் என்ற பெயர் கொண்ட ஒர் அமைச்சர் காத்தார். அவசர கால நிலையில் நாட்டிற்கு ஏற்பட்டநன்மைகளைவிடத் தீமைகள் தாம் அதிகமாயின. ஆங்காங்கே அசுரர்களின் ஆட்சிதான் நடைபெற்றது. இத்தகைய அசுரர்களைத் தொலைப்ப தற்கு ஆண்டவன் துணை நிற்கவில்லை. குமிழி-221 65. பேராசிரியர் K. சச்சிதானந்த மூர்த்தி டாக்டர் D. சகந்நாத ரெட்டியை அடுத்துத் துணைவேந்தராக வந்தவர் பேராசிரியர் டாக்டர் கே. சச்சிதானந்த மூர்த்தி. இவர் ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்தவர்; அமைதியான போக்கையுடையவர், நன்கு கற்றறிந்த சான்றோர். ஐம்பத்திரண்டு அகவையிலேயே துணைவேந்தர்பதவியை எட்டிப்பிடித்தார் என்றால், படிப்பும், திறமையும் பிற தகுதிகளும் மட்டும் காரண மன்று. சாதிச் செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு இவை இருந்தமையால்தான் இவருக்கு இப்பதவி வந்தது என்பதை பல்கலைக் கழகத்து வளாகத்திலே கிளம்பிய பேச்சு. இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் (அப்போது நடுவண் அரசில் நாடாளுமன்றச் செயல்களின் அமைச்ச