பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் கே. சச்சிதானந்த மூர்த்தி 53 s ராக இருந்தவர்) ஐதரபாத்தில் 10 நாட்கள் முகாம் போட்டுத் தங்கி துணைவேந்தர் நியமனத்திற்குரிய ஆணையைப் பிறபித்த பிறகுதான் தில்வி திரும்பினார் என்பது நம்பகமான வட்டாரப் பேச்சாகப் பரவியது" இப்படியெல்லாம் சொல்லுவதால் தகுதியற்ற ஒருவர் தகாத முறையில் பதவிபெற்றார் என்று சொல்லுவதாகக் கருதக் கூடாது. நாட்டுநடப்புகளைச் சீர்தூக்கி ஆய்ந்தால் நாட்டிலுள்ள துணைவேந்தர்கள் யாவருமே இந்த முறை யில்தான் பதவிக்கு வந்தனர் என்று கூறினால் அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு இரு வேறு கருத்து கள் இருக்க முடியாது. திரை மறைவில் நடைபெற்றாலும் புதிர்க்கதிர்க் (X-Ray) கண்களுக்குத் தெரியாமற்போகாது. எலக்ட்ரான் செவிகட்குக் கேட்காமல் போகாது. இளைஞர் கட்கு 1 A S தேர்வுகள் இருப்பது போல் அறுபது வயதை எட்டும் முதியவர்கட்கு துணைவேந்தர் பதவிக்கென எழுத்து முறைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு முதலிய புறவயமான (Objective) முறைகளில் தேர்வுகள் வைத் தால் இது காறும் பதவிக்கு வந்தவர்கள் (நாடு விடுதலை பெற்ற பிறகு) பெரும்பாலோர் இந்தப் பதவியைப் பெற்றிருத்தல் முடியாது. நேர்வழியைவிடக் குறுக்குவழி தானே எளிதானது; அடைய வேண்டிய இடத்தைஎளிதாக வும் சீக்கிரமாகவும் அடைய முடியும், இதுகாறும் பதவி வகித்துஒய்வு பெற்றவர்களின்செயல்திறன் நிர்வாகத்திறன் ஆக்கமுறைச் செயற்பாடுகள் முதலியவற்றை அடிப்படை யாக வைத்து ஆராய்ந்தால் மலைக்கும்மண்ணாங்கட்டிக்கு முள்ள வேறுபாடுகள் அங்கை நெல்லியாகப் புலனாகும். சிலரது காலத்தில் நிர்வாகமே குலைந்து போயிருத்தலை யும் காணலாம். எந்தத் துணைவேந்தர் பதவியேற்றாலும் பதவியேற்ற அன்றே துறைத் தலைவர்களைப் பார்த்துப் பேசுவது மரபு, டாக்டர் சகந்நாதரெட்டி காலத்திலும் இது நடை பெற்றது: டாக்டர் K.S. மூர்த்தி காலத்திலும் நடை.