பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53? நினைவுக் குமிழிகள்-கி பெற்றது. . இந்தக் கூட்டம் ஒருவரையொருவர் அறிமுகப் படுத்திக் கொள்வதற்குரிய ஒரு வாய்ப்பே யன்றி, அதற்கு மேல் பலன் ஒன்றும் இல்லை. நாளடைவில்தான் செயல் திறனால் (இல்லை காக்கை-கால் - கை = காக்கைபிடித்தலினால்) ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். எந்தத் துணைவேந்தரும் புதிதாகப் பதவியேற்ற வுடன் துறைப் பேராசிரியர்கள் தங்கள் துறையிலுள்ள கழகத் தொடக்க விழாவிற்கோ நிறைவு விழாவிற்கோ அவரை முதன்முதலாக அழைத்துப் பேசச் செய்வது வழக்கம். பேராசிரியர் K.S. மூர்த்தியவர்கள் தத்துவத் துறையைச் சேர்ந்தவராதலால் தத்துவத்துறை முதன் முதலாக அவரை அழைத்தது. முதல் கூட்டமாதலால் பல துறைகளிலுமிருந்தும் அதிகமான பேர்கள் வந்திருந்தனர். பேராசிரியர் K. S. மூர்த்தியவர்கள் நல்ல பேச்சாளர் அல்லர்; டாக்டர் சகந்நாதரெட்டியைப் போல் நன்கு தயார் செய்து கொண்டு வந்து பேசுபவரும் அல்லர். அன்று ஏதோ பேசினார்; புதிய கருத்துகள் ஒன்றும் பேச்சில் குமிழியிடவில்லை. பழைய கருத்துகளைப் புதிய நோக்கில் எடுத்துரைக்கவும் இல்லை. கூட்டத்தைத் திசை திருப்ப நினைத்து கூட்டத்தின் இறுதியில் வினாக்கள் எழுப்பலாம் என்று சந்தர்ப்பம் தந்தார். பெரும்பாலோர்வேறு துறைகளிலிருந்து வந்திருந்தோர்-வாயைத்திறக்கவே. இல்லை. தத்துவத்துறையிலுள்ளவர்களும் வினாக்கள் விடுக்கத் தயங்கினர். பல ஆண்டுகளாக நான் தத்துவத் துறையில் ஆழங்காலபட்டவனாதலால் ஒரு வினாவை விடுக்க நினைத்தேன். வினாவிற்கு விடை தெரியாமல் விடுக்கவில்லை. மறுமொழி கூறும் முறையைத் தெரிந்து. கொள்ளவே விடுத்தேன். திருப்பதியில் தமிழ்த் துறையைத் தவிர வேறு எந்தத் துறையிலும் தமிழ்புழங்குவதைக்காண முடியாது: தமிழ் ஒலியையும் கேட்க முடியாது. ஆங்கிலம் புழங்குவதுதான் பெரு வழக்காக இருந்தது.