பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் கே. சச்சிதானந்த மூர்த்தி 53.3 நான் ஆங்கிலத்தில் தொடுத்த வினா இது: துவைதம், விசிட்டாத் வைதம், அத்வைதம்-என்ற மூன்று தத்துவங்கள் உண்டல்லவா? இந்த மூன்றுக்குரிய வேறு பாடுகளை இங்குள்ளவர்கட்கு விளக்க வேண்டுகின்றேன்.” என்றேன். டாக்டர் ரெட்டியார், இது சிக்கலான வினா. எளிதில் விளக்க முடியாது. வடமொழித் துறையை நாடி அங்குத் தெரிந்து கொள்ளலாம்' என்ற பதில் வந்தது. நான் சொன்னேன்; ஐயா இது சிக்கலான வினாவன்று. எளிதாக மூன்று வாக்கியத்தில் விளக்கலாம். எனக்கு விடை தெரியாமல் இதை விடுக்கவில்லை. எல்லோரும் அறிந்து கொள்ளவே இதை விடுத்தேன். தாங்கள் இசைவு தந்தால் இரண்டே மணித்துளிகளில் விளக்குவேன்' என்றேன். :விளக்குங்கள்' என்றார். இந்த வினா விவேகாநந்தரோ அல்லது யாரோ ஒரு சீடர் இராம கிகுஷ்ணபரமஹம்சரை நோக்கி விடுக்கப்பட்டது. அதற்கு அம்முனிவர் கூறிய விடை இது. வழிப் போக்கர் ஒருவர் எய்ப்பினில் வைப்பாக இருக்கட்டும் என்று கட்டுணவு எடுத்துச் செல்லுகின்றார். இப்போது கட்டுணவு, எடுத்துச் செல்பவர் தனித்தனியாகவுள்ள பொருள்கள்: சீவான்மாவும் பரமான்மாவும் தனித்தனியாகவுள்ள துவைதம் போன்றது இந்நிலை. சில கல் தொலைவு நடந்து சென்ற பிறகு பசி வருகின்றது. வழிப்போக்கர் கட்டமுதை உண்கின்றார். இப்போது கட்டமுது அவரது வயிற்றை அடைகின்றது. இப்போது இரண்டும் (அவரும் கட்டமுதும்) தனித்தனியாகக் காணப் பெற்றாலும் இரண்டும் ஒரே நிலையில் உள்ளன. இது தான் பரமான்மாவும் சீவான்மாவும் விசிட்டாத்வைதத்தில் இருக்கும் நிலையைக் காட்டுவது. வழிப்போக்கன் பல கல் தொலைவு நடந்து செல்லுகின்றான். கட்டமுது உருவம் தெரியாமல் செரிமானம் ஆய்விடுகின்றது; உடலில் கலந்து விடுகின்றது. இதுதான் சீவான்மா பரமான்மாவுடன் கலந்து விடும் அத்துவித நிலை (இரண்டல்லாத நிலை)யை விளக்குகின்றது' என்றேன். உடனே பேராசிரியர் K. S.