பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் கே. சச்சிதானந்த மூர்த்தி 535 டாக்டர் D. சகங்காதரெட்டி காலத்தில் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவி சேர்க்கப் பெற்றிருந்தது. அதை நீக்கி அப்பதவியை விரிவுரையாளர் பதவியாக மாற்றியமைத்தார். துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் அடாத செயல் இது. நான் இதைக் கண்டு எதிர்ப்புக் கடிதம் எழுதியும் பலன் அளிக்கவில்லை. பேராசிரியர் மூர்த்தி வந்த பிறகு பல துறைகள் பற்றிய கோப்புகளையெல்லாம் நன்கு துளைத்துப் பார்த்து பல துறைகளில் டாக்டர் சகந்நாதரெட்டி விளைவித்திருந்த ஊழல்களையெல்லாம் போக்கினார். இந்த நிலையில்தான் தமிழ்த்துறை தொடர்பான கோப்புகளைப் பார்க்கும் போது பேராசிரியர் பதவிக்குரிய தொகை குறைக்கப் பெற்று விரிவுரையாளர் பதவிக்குரிய தொகையாக இருப்ப தாகக் கண்டார். அந்தப் பதவியை மீண்டும் பேராசிரியர் பதவியாக உயர்த்தி அதற்குத்தேவையான தொகையையும் வரவு-செலவுத் திட்டத்தில் சேர்த்துப் பேரவையின் அங்கீகாரத்தையும் பெற்றார். என்னுடைய வயது . தகுதி முதலியவற்றையும் நான் பட்ட துன்பங்களையும் உசாவி யறிந்து எப்படியாவது (ஒர் ஆண்டாவது) பேராசிரியராக உயர்த்த வேண்டும் என்று முடிவு எடுத்து அதற்குத் தகுந்த வாறு நடவடிக்கைகளை எடுத்ததைப் பின்னர் என்னால் அறிய முடிந்தது. இதற்கு எந்த முயற்சியும் நான் எடுக்க வில்லை; அவராகவே செய்த அவரது பரந்த மனப்பான்மை பொன்னெழுத்துகளால் போற்றத் தக்கது என்பதை ஈண்டுக் குறிப்பிடாமல் இருக்க முடிய வில்லை. வருவது தானே வரும், தீதும் நன்றும் பிறர்தர வாரா. ' பேராசிரியர் மூர்த்தி என்னை அடிக்கடிக் காணு மாறும், துறைக்கு வேண்டிய தேவைகளைத் தாராள மாகக் கேட்குமாறும் பணிப்பார், நாயுடு-ரெட்டி என்ற போராட்டம் ஆந்திர மாநிலத்திற்குரியது என்று தெளி வாக அறிந்த துணைவேந்தர் தமிழகத்திலிருந்து போந்த என்னை அந்தப் போராட்டத்தில் சேர்க்கவில்லை; ஆனால்