பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 நினைவுக் குமிழிகள்-4 டாக்டர் தாமோதரன் இந்தப் போராட்டத்தில் தன்னை உட்படுத்திக் கொண்டிருந்ததையும் இதில் பட்டுக் கொள் ளாமல் நான் ஒதுங்கியிருந்ததையும் கண்டு கொண்டார். பலரை உசாவியறிந்தும் எங்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து நோக்கியும் எங்களை அளந்தறிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெளிவாகப் புலனா போகும் போதெல்லாம் துணைவேந்தர் துறையின் வளர்ச்சி பற்றியே பேசுவார். தத்துவங்களைப் பற்றி அதிகம் பேசுவார். ஒரு சமயம் அக்கமணியைப் (உருத்திராக்சம்) பற்றிய பேச்சு எழுந்தது. அதைத் தரித்துக் கொண்டிருப்பதால் உடலுக்கு நல்லது என்றார். அதைத் தரித்துக் கொண்டு நீராடும் போது அதில்பட்ட நீர் உடலிலும் படுவதால் அதிலுள்ள மருந்துக் குணம் உடல் நலத்தைப் பேணும் என்றார். நான் காசியிலிருந்து பெற்ற 108 மணிகளைத் தங்கத்தால் மாலையாகக் கட்டி வைத் திருந்ததைப் பார்த்து நல்ல மணிகள் என்றார், எப்போதும் தரித்துக் கொண்டிருப்பது நல்லது என்றும் பரித்துரைத் தார். சில சமயம் தத்துவ ஆராய்ச்சியிலும் பேச்சுசெல்லும். என்னென்னவோக பேசினோம். பெரும்பாலும் அவை சித்தாந்தத்தைப் பற்றியே இருக்கும்.வைணவ சமயத்தைப் பற்றி அதிகம் பேசாததால் அதில் அவருக்கு ஈடுபாடு இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பல்கலைக் கழக வளாகத்தில் அவரைச் சாதி வெறியர் என்று ரெட்டி குலத்தைச் சேர்ந்தவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கின்றேன், ஆயினும் நான் அறிந்த வரை அப்படிப்பட்டவராகத் தோன்ற வில்லை. எல்லா சாதியாரிடமும் நன்றாகத்தான் பழகிக் கொண்டிருந்தார். ஆனால் கம்மா நாயுடு சாதியைச் சேர்ந்தவர்கள்பெரும்பாலும் வெளியார்-அதிகம் நெருங்குவதை நேரில் பார்த்திருக்கின்றேன். இதனால் கம்மா நாயுடு