பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் கே. சச்சிதானந்தமூர்த்தி 537 சாதியாருக்கு அதிக நன்மைகள் செய்கின்றார் என்று சொல்ல முடியவில்லை. அதிகமாக நாடும் அச்சாதி யாரிடம் அந்த வெறி இருந்திருக்கலாம். அவர்கள் தங்கட்கு உதவுவார் என்று கருதியிருக்கலாம். இவரும் அவர்களுடன் உலகியலையொட்டி நெருங்கிப் பழகி யிருக்கலாம். செயலில் தனிப்பட்ட முறையில் எத்தகைய சலுகைகளும் காட்டியதாகத் தெரியவில்லை. ரெட்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் இங்ங்ணம் சாதிவெறியர் என்று பேசிக் கொண்டிருந்தனர். இது அழகான இளம் பெண்ணைப்பற்றி இளைஞர்கள்-ஒருதலைக் காதலில் திளைப்பவர்கள்-பேசும் அலரைப் போன்றது என்று தான் நினைக்கச் செய்தது. பெண் கற்புடையவள் என்பதைச் சிலர்தான் அறிய முடியும். இந்தக் கதை போலத்தான் ரெட்டி வகுப்பினரின் பேச்சு இருந்ததைக் கண்டேன். நான் துணைவேந்தரின் இல்லத்திற்குப் போகும் போதெல்லாம் 10 பேருக்குக் குறையாத ஒரு சிறு கூட்டத் தைக் காண்பதுண்டு. இந்தக் கூட்டம் திருமாளிகைக்கு வெளியில் சாலையோரத்தில்தான் இருக்கும். ஏதோ தெலுங்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். தெலுங்குப் பேச்சு ஓரளவு, எனக்குப்புரியுமாதலால் என் காதில் படும் ஒரு சில வாக்கியங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 'எப்படியாகிலும் இதை நீங்கள்தான் முடித்துத் தர வேண்டும்' என்று கூட்டத்திலுள்ள ஒருவர் சொல்வார். 'முடித்துத் தருவது என் பொறுப்பு’ என்று சொல்லி விட்டு ஒருவர் திருமாளிகைக்குள் நுழைவார். 15 மணித் துளிகள் உள்ளேயே உலவுவார். மாமரத்தைச் சுற்றுவார். அரசு-வேம்பு சேர்ந்த அமைப்பு ஒன்றும் அங்கு இல்லை. இருந்திருந்தால் அதைச் கற்றியிருப்பார். வெளியில் வந்து கூட்டத்தினரிடம் சொல்லி விட்டேன், கவனிப்பதாகச் சொன்னார். கவலை வேண்டாம்' என்று சொல்லுவார். கூட்டமும் கலையும்.