பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 நினைவுக் குமிழிகள்.கி. இப்படிப் பலமுறை நேரில் கண்டதையும் காதில் விழுந்த பேச்சுகளையும் துணைவேந்தரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். 'உங்கள் சாதியார் உங்கள் நற்பெயரை இப்படி நாடோறும் கெடுத்துக் கொண்டு வருகின்றனர்' என்று சொல்லி எச்சரிப்பதுண்டு. அதற்கு அவர் "இவற்றை நானும் அறிவேன். இஃது அரசியல்வாதிகளின் போக்கு, நான் மனச் சான்றுபடி நடப்பவன். யாரையும் கடிந்து கொள்ளாமல் இனிமையாகப் பேசி அனுப்பி விடுவேன்’ என்று சொல்லுவார். இங்ஙனம் நான் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு (முதல் துணைவேந்தர்), டாக்டர் W. C. வாமன்ராவ் (இரண்டாம் துணைவேந்தர்) டாக்டர் K.S. மூர்த்தி (நான்காம் துணைவேந்தர்) இவர் களுடன் நன்கு பழகுவேன். எப்பொழுது சந்தித்தாலும் என் பதவி உயர்வு பற்றியோ, வேறு சொந்த சலுகைகள் பற்றியோ ஒருபொழுதும் பேசுவதில்லை என்பதை ஏழுமலையான்தான் அறிவான். குமிழி-222 66. டாக்டர் மு.வ.வின் இலக்கியப் படைப்புகள் பற்றிய கருத்தரங்கு டாக்டர் மு. வ. 1974இல் திருநாடு அலங்கரித்தார். சிறுவயதில் அவருடைய பாட்டனார் பெயரும் வரதராசன் என்பதால் அவரை வீட்டிலுள்ளார் (பாட்டனார் மறையும் வரை) திருவேங்கடம் என்றுதான் அழைப்பார் கள் என்று அவர் என்னிடம் பலமுறை சொல்லியதுண்டு. இதனால் நான் அவர் பேரில் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் ஏதாவது நினைவுச் சின்னம் ஏற்படுத்துதல் வேண்டும் என்று என் மனம் அடிக்கடி எண்ணியது. இதற்காக ஒரு சிறு குழு அமைத்து தொகை திரட்ட