பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வ. வின் இலக்கியப் படைப்புகள். 539 முயன்றேன். பாரி நிலைய உரிமையாளர் K. A. செல்லப்பனைப் பொருளாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டேன்; அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால், நான் நினைத்தபடி குழு வேலை செய்யவில்லை. மலேயா பல்கலைக் கழகத்திலிருந்து மு. வ. மாணவர் டாக்டர் தண்டாயுதம் என்பவர் மட்டிலும் (அவர் இப்போது இல்லை. சில ஆண்டுகட்கு முன்னர் திருநாடு அலங்கரித் தார்) ரூ. 5000/த்து சில்லறை பல்கலைக் கழகப் பதிவாளர் பேருக்கு நான் கேட்டபடி டிராப்ட் வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார்; அதை நான் பதிவாளர் பேருக்கு அனுப்பி வைத்து விட்டேன். இஃது இப்படியிருக்க, மு.வ. படைப்பு இலக்கியம் பற்றி ஒரு கருத்தரங்கு நடத்த நினைத்தேன். பல்கலைக் கழக மானிய இணையத்திற்கு எழுதினால் தனிப்பட்டவர் பெயரில் நடைபெறும் கருத்தரங்கிற்கு நிதி கிடைக்காது என்று நினைத்து விண்ணப்பம் அனுப்பவில்லை. கருத்தரங் கைப் பணம் இல்லாது எப்படி நடத்துவது? யோசித்தேன் யோசித்தேன், யோசித்தேன். யோசனையால் ஒளி உதய மாயிற்று. துணைவேந்தரை நாடி ரூ. 1000/- வழங்குமாறு கேட்பது; இத்தொகை ஒருநாள் கருத்தரங்கிற்கு வருவோ ருக்கு உணவு, அழைப்பிதழ் அச்சடிக்கும் செலவு, அஞ்சல் செலவு, பல்கலைக் கழகச் சிற்றுந்தைப் பயன்படுத்தினால் அதற்குக் கட்ட வேண்டிய செலவு முதலியவற்றிற்குப் போதும் என்று நினைத்தேன். மு. வ. மாணாக்கர்களில் பலர் பேராசிரியர்களாக உள்ளனர்; அவர்களை அவரவர் செலவில் வந்து போகுமாறு கேட்பது என்று முடிவு செய்தேன். ஒருநாள் கருத்தரங்கு போதும் என்றும் முடிவு: செய்தேன். இதிலும் இறைவன் வழிகாட்டுவான் என்ற நம்பிக்கையோடு செயற்பட்டேன். ஒ ரு ந | ள் துணைவேந்தர் .ே ய ர ர சி ரி யர் K. S. மூர்த்தியைச் சந்தித்து என்னுடைய திட்டத்தை