பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

站40 நினைவுக் குமிழிகள்-4 அவர் முன் வைத்து ரூ.1000/- பல்கலைக் கழகப் பொது நிதியிலிருந்து வழங்குமாறு வேண்டினேன். வேங்கட வாணன் அவர்மூலம் அதைக் கிடைக்கச் செய்ததால், துணைவேந்தர் மனமுவந்து ஒருப்பட்டார். துணைவேந்தர் வந்த ஆறு திங்களுக்குள் தமிழ்த் துறையின்மீது அன்பு கொண்டது பெருவியப்பாக இருந்தது. கருத்தரங்கின் தலைவர் துணைவேந்தர் தான் என்பது பல்கலைக் கழக மரபு. எதற்கும் அவரை அண்மிக் கேட்ட போது அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். திரு. அன்பழகன் (மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர்) டாக்டர் மு. வ.வுடன் பணியாற்றினார் என்றும், அவரைக் கொண்டு மு.வ. படத்தைத் திறந்து வைக்கச் செய்யலாமா என்றும் கேட்டதற்கு அவர் மிகவும் பொருத்தம்' என்றார்; தானே அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகவும் சொன்னார்; எழுதினார். நானும் அவரை நேரில் பார்த்தும், எழுதியும் கேட்டேன்; அவரும் மனமுவந்து ஒப்புக் கொண்டார். மு.வ. மாணவர் டாக்டர் தண்டாயுதத்திற்குத் தலைப்பு தந்து அதுபற்றி ஆய்வுக் கட்டுரை வழங்குமாறு கேட்டு எழுதினேன்; அவரும் அனுப்பி வைத்தார். இது தவிர, டாக்டர் மு.வ. வின் நெருங்கிய நண்பரும் தமிழக உணவுச் செயலருமான திரவியம் அவர்களைக் கொண்டு கருத்தரங்கைத் தொடங்க நினைத்தேன்; அவரும் அதற்குப் பச்சைக் கொடி காட்டினார் . இனி, இந்தியாவில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் மு. வ. மாணவர்களில் டாக்டர் ம. ரா.போ. குருசாமி (கோவை பூ.சா.கோ. கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்), டாக்டர் சி. பாலசுப்பிரமணியம் (தமிழ்த் துணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்), டாக்டர் P. செளரி ராஜன் (தமிழ்த் துணைப்பேராசிரியர், திருவேங்கடவன் பல்கலைக் கழகம்) S. வேங்கடாமி