பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வ. வின் இலக்கியப் படைப்புகள். 婷4璋 (துணைச் செயலர், தமிழ் நாடு அரசு), K. A. இரகு நாயகம் (வணிகர், திருப்பத்தூர்), கு. இராஜவேலு (இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ் நாடு அரசு) இவர்கட்கெல்லாம் தலைப்புகள் தந்து ஆய்வுக்கட்டுரை கள் தருமாறு எழுதிக் கேட்டிருந்தேன். கு. இராஜவேலு. ஏதோ காரணத்தால் கருத்தரங்கில் கலந்து கொள்ள வில்லை; ஏனையோர் . கட்டுரைகள் வழங்கினார்கள். திரு. க. திரவியத்தை அழைத்து வரும் பொறுப்பை திரு. S. வேங்கடசாமிக்கு விட்டிருந்தேன். அவரும் க. திரவியத்தை காரிலேயே அழைத்து வந்து விட்டார். பல்கலைக்கழகத்திலிருந்து 1000/-இல் கார் பயணப்படியாக ரூ 200/- சில்லறை திரு க. திரவியத்திற்கு வழங்கியதாக நினைவு.ஏனையோருக்குத் தங்கவசதி, விருந்து இவைதான் வழங்க முடிந்தது. கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. (சனவரி-1976) திருப்பதி இசைக் கல்லூரி இசைப் பேராசிரியர் திரு. பசுபதி இறைவணக்கம் பாட, அவர் துணைவி சுதி கூட்டினார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து ரிக்கார்டு மூலம் நடைபெற்றது. நான் வரவேற்புரை நல்கினேன். மாண்புமிகு அமைச்சர்பேராசிரியர் அன்பழகன் மு. வ. படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். க.திரவியம் அற்புதமாக ஆங்கிலத்தில் உரையாற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் பேச்சைக் கேட்டு ஆங்கிலப் பேராசிரியர்கள்கூட மூக்கின் மீது விரலை வைத்தனர். துணைவேந்தரின் தலைமையுரைக்குப் பிறகு டாக்டர் P. செளரிராசன் நன்றி நவில, முற்பகல் நிகழ்ச்சி இனிமையாக நிறைவேறியது. விருந்தினர் மாளிகையில் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கட்குத் துணைவேந்தர் விருந்தளித்தார். விருந்திற்குப் பிறகு துணைவேந்தார் பலர் முன்னிலையில், 'டாக்டர் ரெட்டியார் மிகத் திறமையாகப் பணியாற்றி வருகின்றார். ஒல்லும் வகையெல்லாம் தமிழ்த் துறையின்