பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாக்டர் மு. வ. வின் இலக்கியப் படைப்புகள்... 543 பதிவாளர் பெயருக்கு டிராப்ட் வாங்கி ஆனந்தம் செட்டியார் எனக்கு அனுப்பிவைத்தார் (ஒய்வு பெற்று நான் சென்னைக்கு வந்த பிறகு). நான் அதைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்து விட்டேன். இப்பொழுது மு. வ. பேரிலுள்ள அறக்கட்டளையில் ரூ 7000/-சில்லறை பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அக்காலத் தில் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு ரூ 15,000/தரவேண்டும் என்பது விதி, மக்கள் ஒத்துழைக்காததால், நானும் ஒய்வு பெற்று விட்டதால், நிதி திரட்ட முடிய வில்லை. பாரிநிலைய அதிபரிடம் தந்த 3 செக்குகள் (100 வீதம்), ரூ 500/- க்குரிய டிராப்டுகளை பாங்கியில் போடாமல் வைத்திருந்தார். வைத்த இடம் தெரிய வில்லை. தேடினார், தேடினார், தேடினார். அவை 9 ஆண்டுகள் கழித்து 1985-இல் கிடைத்தது. அவற்றின் தேதிகளை மாற்றி உயிர்பெறச் செய்து ரு 8001. சேர்த்தேன். இந்த நிலையில் தமிழ்த் துறையின் வெள்ளி விழாவும் வந்தது. அதற்குள்iஇத்தொகையைப் பல்கலைக் கழகத்தில் சேர்த்து விட்டேன். ரூ 7000/-க்கு ஒன்பது ஆண்டு வட்டியும் சேரவே, தொகை ரூ 11000/- க்கு மேல் பெருகியிருந்தது இதன் வட்டியிலிருந்து பி.எச்.டி., எம் ஃபில் ஆய்வு மாணவருக்கு ரூ 100/- வீதம் அவர் ஆய்வு முடியும் வரை வழங்கலாம் என்று பல்கலைக்கழகத் திற்கு எழுதி 10 ஆண்டுகளாக என்னிடம் இருந்த கோப்பையும் தமிழ்த் துறையில் ஒப்படைத்து என்னுடைய பொறுப்பையும் முடித்துக் கொண்டேன்.