பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-223 67. என் மணிவிழா என் மணிவிழா நடைபெற்றவன்று சிந்தித்த அதே பாசுரத்தை இன்று (14-4-1990) - பதினான்கு ஆண்டுகள் கழித்து மணிவிழாவைப் பற்றிச் சிந்திக்கும் இன்று-சிந்திக் கின்றேன். 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா! நிகர் இல் புகதாய்! உலகம்மூன்று உடையாய்! என்னை ஆள்வானே! நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே! என்பது பாசுரம்; பிரபத்தி மார்க்கத்தைக் காட்டும் உயிராய பாசுரம் இது. 1976-ஆகஸ்டு-27 இல் நான் பிறந்து 60 ஆண்டு முடிந்து அறுபத்து ஒன்றாம் ஆண்டில் கால் வைக்கின்றேன். பிறந்தது ஆயில்ய நட்சத்திரம். அதே நட்சத்திரத்தில் 'சில்வாழ் பல்பிணிச்சிற்றுயிராகிய என் (எங்கள்-என் மனைவி உட்பட) பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட பிறப்பிலி எம்பெருமான் சீமன் நாராயணனின் திருக்கல்யாண உற்சவத்தைக் கண்டுகளிக்க எண்ணினேன். ஆகஸ்டு மாதம் (1976) ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த . حسسسسسسسسسسسسسسساحة 1. திருவாய் 6.10:10