பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மணிவிழா 54む உற்சவம் நடைபெறுவதற்காக தேவஸ்தான அலுவலகத் தில் ரு 1000/- செலுத்தி நாளை உறுதிசெய்தேன், உற்சவ நாளன்று நாங்கள் தங்குவதற்கு ஒரு குடிசையை (A. T. C. Cottage) ஒதுக்கீடு செய்து கொண்டேன். வேலூரிலிருந்து என் முதல் மகன் இராமலிங்கம் திருமணத்தால் ஏற்பட்ட சம்பந்திகள் வந்திருந்தனர். என் கல்லூரி வாழ்க்கை தொடங்கின நாள் முதல் (ஜூன்-1934) அன்று வரை நெருங்கிய நண்பராகஉடன்பிறவாச்சோதராக-இருந்துவந்ததிரு.P. அரங்கசாமி ரெட்டியாரும் (வழக்குரைஞர்) வருகை புரிந்திருந்தார். திருக்கல்யாண உற்சவம் பகல் ஒரு மணிக்குத் தொடங்கி மாலை 3-30க்கு முடிந்தது, அன்று 25 திருக்கல்யாணங் கள் சேர்ந்தாற்போல் நடைபெற்றன. சம்பந்திகட்குப் புத்தாடைகள் வாங்கித் தரப்பெற்றன. நாங்களும் புத்தாடைகள் அணிந்து கொண்டோம் என் மூத்த மகன், மருமகள் இளைய மகன் இவர்களும் புத்தாடைகள் அணிந்து கொண்டனர். ஐம்பது பேர்கட் பரிமாறக் கூடிய பிரசாத வகைகள் நாங்கள் தங்கியிருக்கும் குடிலுக்கு வந்தன. நாங்கள் ஏழுபேர்தான். விரிவாக யாரையும் அழைக்கவில்லை . கல்லூரி வேலை நாள் ஆனதால் துறையிலிருந்து ஒருவரும் வரவில்லை; இரவு வீட்டிற்குதான் வந்தனர். பிரசாத வகைகளை உண்டனர். இங்கனம் எங்கள் மணி விழாவை எம்பெருமானின் திருக்கல்யாண உற்சவமாகக்கொண்டாடி அவன் திருவருளைப் பெற்றோம். நான் திருப்பதியில் பணியாற்றியபோது பல சிறப்பு மலர்கள், பெரியார்களின் மணிவிழா மலர்கள். பல இதழ்களின் வெள்ளி விழாமலர்கள். கருத்தரங்குகளில் படிக்கப் பெற்ற ஆய்வுக் கட்டுரைகள் சில தமிழ்ச் சங்க வெள்ளிவிழாமலர்கள் இவற்றில் வெளியான 10 கட்டுரை களைத் தொகுத்து *அறிவியல் தமிழ்' என்ற நி-35