பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 நினைவுக் குமிழிகள்-4 தலைப்பில் என்மணிவிழா நினைவாக என் மக்கள் வெளியிட்டனர். என் அருமை மாணவர் திரு சிலம்பொலி சு. செல்லப்பன் (இப்போதுதமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணியாற்றி, ஒய்வு பெற்றபின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக இருப்பவர்). ஒர் அணிந்துரையால்,இந்நூலைச் சிறப்பித்தார். இதில், ஆசிரி யரின் இந்த அரிய முயற்சியைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்குவரவேற்குமாக இவருடைய நூற்றாண்டு விழாவின் போதுஇத்தகையதொரு நூலைத் தொகுத்து இவர்கையில் தந்து மகிழும் பேறு மாணாக்கனாகிய எனக்குக் கிட்ட வேண்டுமென்ற விழைவுடன் என் ஆசிரியப் பெருமகனார் பன்னெடுங் காலம் பயன் பெருக்கி வாழவேண்டுமென உளமார வாழ்த்துகின்றேன்’ என்ற பகுதி எவர் மனத்தை யும் கவரும். அறிவியல் தமிழ் என்ற இந்த நூல் என்னுடைய இருபத்தொன்பதாவது (மார்ச்சு-1976) வெளியீடாகும். இதன் இரண்டாவது பதிப்பு (ஜூலை1981) தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி என்ற புதிய தொரு கட்டுரையுடன் என் 64-வது அகவை நினைவு வெளியீடாக வெளிவந்தது. குமிழி-224 68. தொலை உலகச் செலவு வெளியீடு விபுவான (எங்கும் நிறைந்த) ஆண்டவன் ஞானசொரூப முடையவன் என்றும், அங்ங்னமே அணுவள வான ஆன்மாவும் ஞான வடிவுடையது என்றும் வேதாந்த நூல்கள் விரித்துப் பேசும். ஆண்டவன் வினைகட்கு அப்பாற்பட்டவன்: ஆ ன் மா வே வினைகளினால் கட்டுண்டு கிடப்பது. ஞானவடிவான ஆன்மாவிற்கும் ஒரு ஞானம் உண்டு. அது 'தர்மபூத ஞானம்' எனப்படும்.