பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலை உலகச் செலவு வெளியீடு 547 ஆண்டவன் அருள் இருப்பின் தியானத்தினால் மனம் ஒன்றித் தர்மபூத ஞானம் மலர்ந்து ஆன்மா ஆண்டவனையே காணும் ஆற்றலைப் பெறும். ஞானிகள் இந்த ஆற்றலைப் பெற்றுள்ளனர். அவர்கள் கால எல்லை யையும் (Time) கடந்து நடந்ததையும் நடக்கப் போவதை யும் முற்கூறும் ஆற்றல் பெற்றவர்கள். வசிட்டர், வாமதேவர், யக்ஞய வால்க்கியர் போன்ற உபநிடத முனிவர்கள் இந்த ஞானியர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்; அங்ங்ணமே விஞ்ஞானிகள் (அறிவியலறிஞர்கள்) மன்ம் ஒன்றி ஆய்வுகளால் இடத்தைக் (Space) கடந்து பல உண்மைகளைக் காணவல்லவர்கள். அதனால்தான் தாம் போகாமலேயே மதிமண்டலம், செவ்வாய் மண்டலம் போன்ற இடங்களின் தன்மைகளை நன்கு அறிந்து அவர் களால் பயணங்களை மேற்கொள்ள முடிகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆளுள்ள பயணங்களை மேற் கொண்டு அம்புலிக்குச் சென்று மீண்டனர். அண்மையில் செவ்வாய்க்கு ஆளில்லாப் பயணங்களை மேற்கொண்டு வெற்றி கண்டனர். செவ்வாய்க் கோளில் உயிர் உண்டா என்ற சோதனையும் நடத்தி வருகின்றனர். இங்ஙனமே, கவிஞர்களும் சில சமயம் தம்மை அறியாமல் கற்பனையினால் தொலைவிலுள்ள உலகங் களையே மானசீகமாகக் கண்டுகளிக்கின்றனர், பாரதியாரும், பூமிக் கெனைய னுப்பினான்-அந்தப் புதமண் டலத்திலென் தம்பி களுண்டு? என்று புதன் மண்டலத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாடி புள்ளார் போலும். இன்னும் வருங்காலத்தில் மனித மனம் எல்லாக் கோள்கட்கும் பயணம் செய்யவும் அங்குள்ள நிலைமைகளை ஆராயவும் முயன்று வரும் என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை. இங்கனம் மனித மனம் மேற் 1. கண்ணன் பாட்டு-கண்ணன்-என் தந்தை Քլւգ (1-2)