பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 நினைவுக் குமிழிகள்-4 கொள்ளும் செயல்களையெல்லாம் பொதுமக்களும் பள்ளிச் சிறார்களும் அப்பொழுதுக் கப்பொழுது அறிந்து கொள்ள வாய்ப்பளிப்பது அறிஞர்களின் கடமையாகும். எளியமுறையில் கவர்ச்சியூட்டும் வண்ணம் சிறிய சிறிய அறிவியல் நூல்களை எழுதி அவர்கள் கைக்குக் கிட்டச் செய்தல் வேண்டும். பல நுட்பமான அறிவியல் உண்மை. களையும் எளிய முறையில் விளக்குவனவாக நூல்கள் அமைதல் வேண்டும். இந்த முறையில் இந்த வரிசையில் வெளிவரும் நூல்கள் பெரும் பணியாற்றும் என்ற நம்பிக்கையுடன் இம்முயற்சியில் ஈடுபடலானேன். 1970-இல் அப்போலோ-11 பயணம் முற்றுப் பெற்ற சிலநாட்களில் 'அம்புலிப் பயணம்' என்ற நூலுடன் இந்நூல் இரட்டைக் குழந்தை போல் பிறந்தது. மூன்றாண்டுகள் இறகுகள் முளைக்காத சிறுகுஞ்சு போல் கிடந்து அம்புலிப் பயணம் 1973-இல் இறகுகள் முளைத்துப் பறக்கத் தொடங்கியது. ஆனால், இந்த நூல் செவ்வாய்க் கோள் ஆய்வு வெற்றியை ஏந்திக் கொண்டு பறக்க வேண்டும் என்று காத்துக் கிடந்தது போலும்! அந்த வெற்றியின் எக்களிப்பினால், இதற்கும் இறகுகள் முளைத்தன: தமிழ்கூறு நல்லுலகில் பறக்கவும் தொடங்கியது. இனி, இந்த இரண்டு நூல்களும் தமிழ் கூறு நல்லுலகெங்கனும் இராமஇலட்சுமணர்கள்போல் இணைந்தே பறந்து செல்லும் என்ற என் நம்பிக்கையை உண்மையாக்கி வருவதைக் கண்டு மகிழ்கின்றேன். எந்த நூலை எழுதினாலும் அதற்கு அணிந்துரை ஒருவரிடமிருந்து பெறுவதையும், பண்பினாலும் பணி யினாலும் பல்லோர் உள்ளத்தையும் கவர்ந்த பெரியார் ஒருவருக்கு அன்புப் படையலாக்கு வதையும் ஒரு மரபாகப் பின் பற்றிவருவதை வழக்கமாகக் கெண்டுள்ளேன். ஆனால் 2. இது திசம்பர்-1973இல் என்னுடைய 26 வது நூலாக வெளி வந்தது (குமிழி-218) காண்க.