பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைஉலகச் செலவு.வெளியீடு 549 சைவசித்தாந்தக் கழகத்தின் மூலம் சிறுவர்கட்கும் வயது வந்தோர்க்கும் என நினைத்து வெளியிட்ட பொது விருப்பார்ந்த நூல்கள் ஏழுக்கும் அணிந்துரை பெறும் மரபைக்கை விட்டேன். அறிவியல் பயிற்றும் முறை. கவிதை பயிற்றும் முறை என்ற கற்பிக்கும் முறை இரண்டு நூல்கட்கும், மானிட உடல், யுனெஸ்கோ: அறிவியல் பயிற்றும் மூல முதல்நூல், வேமனர். சி.ஆர். ரெட்டி, குரஜாட என்ற ஐந்து தமிழாக்கம் நூல்கட்கும் அணிந்துரை யாரிட்மும் பெறவில்லை; யாருக்கும் அன்புப் படையலாக்கவும் இல்லை. ஏனைய நூல்கள் யாவும் இரண்டும் பெற்று வெளிவந்துள்ளன. "தொலைவுலகச் செலவு என்ற நூலை திரு வேங்கடவன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் W.C. வாமனராவுக்கு (ஒய்வு பெற்ற ஏழாண்டு கட்குப் பிறகு). கலைமகள் இதயப் பெற்றியை உணர்ந்தோன்: கருத்தினில் ஒளியினை வளர்ப்போன்; நிலையினில் திரியாப் பண்பினில் ஒளிர்வோன்: நேயமே பொருளெனக் கொண்டோன்: மலைவிளக் காகும் பல்கலைக் கழக மாண்பினுக் குறுதுணை யானோன்; தலைமைசால் புகழ் சேர் வாமன ராவின் சால்பினுக் குரியதிந் நூலே. என்ற பாடலின் மூலம் அன்புப் படையலாக்கிமகிழ்ந்தேன். இஃது என்னுடைய முப்பதாவது (செப்டம்பர்-1976) நூலாக வெளிவந்தது. இந்த நூலில் இவரைப் பற்றிக் கூறிய குறிப்பு இது: * திருவேங்கடவன் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் W.C. வாமன்ராவ் அவர்கள் கல்வித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். கல்வித்துறையில்