பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறையில் என் மணி விழா 55互 படுத்தினார். திருப்பதியில் நான் இருந்த காலத்தை எல்லோரும் மறந்து விட்ட நிலையில் இந்தப் பைத்தியக் காரப் பேராசிரியர் இன்னும் நினைவு வைத்துக் கொண்டு இருக்கின்றார். இதற்கு நிரந்தர வடிவம் கொடுக்கும் சின்னமாக இந்த நூலை (நூலை அவருக்கு எடுத்துக் காட்டி) எனக்கு அன்புப் படையலாக்கியுள்ளார்' என்று கூறி மகிழ்ந்தார். தேநீர் வழங்கச் செய்தார். பழைய நினைவுகள் திரைக்காட்சிப் படங்கள் போல் மனத்தில் தோன்றிய வண்ணம் பிரியாவிடை பெற்றுத் திரும் பினேன். குமிழி-225 69. தமிழ்த் துறையில் என் மணிவிழா உயர் நிலைப் பள்ளியில் என்னைச் சேர்த்த தொடக்க நிலைப் பள்ளி ஆசிரியர் சேர்க்கும்போது என் பிறந்த நாளை 7-9-1917 என்று தந்து விட்டதால் இந்தத் தேதிப்படி என் மணிவிழா ஆண்டு 1977 ஆக அமைந்தது. (சரியானது 27-8-1916) இறைவன் திருவுள்ளப்படி நான் ஒய்வு பெற்ற ஆண்டும் இதுவேயாக அமைந்தது. இந்த ஆண்டில் என் மணிவிழாவைத் துறையில் கொண்டாட வேண்டுமென்று டாக்டர் செளரிராசனும் (துணைப் பேராசிரியர்) என் ஆய்வு மாணவராக இருந்து டாக்டர் பட்டம் பெற்றவர்) டாக்டர் தேவசங்கீதம் (விரிவுரை யாளர்-என் ஆய்வு மாணவராக இருந்து டாக்டர் பட்டம் பெற்றவர்), திரு N.கடிகாசலம் (என் ஆய்வு மாணவர்) வேறு ஆய்வு மாணவர்களும் நினைத்துச் செயற்பட்டனர். ஒரு மணிவிழா மலரும் வெளியிடக் கருதினர். சிறிய மணிவிழாக் குழு ஒன்று அமைத்துக் கொண்டு தனிப்பட்டவர்கள் பலருக்கும் பல நிறுவனங்கட்கும் எழுதி விளம்பரங்கள் பெற்றனர். என் அரிய நண்பர் திரு