பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 நினைவுக் குமிழிகள் -4 P.ஆதிமூலம் M.A. (ஆசிரியர், பொய்யா மொழி, கெளடிய மடம் சாலை, இராயப் பேட்டை, சென்னை-6000.14) மலரை அச்சுவடிவம் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த விழாவைக் குறித்து தமிழகத்திலுள்ள மடாதிபதிகள் பல்கலைக் கழக மானியக்குழு ஆணையம், துணைவேந்தர்கள், பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள், என்னுடைய ஆசிரியர்கள், மேல்நிலை நீதி மன்றம் (தில்லி), சென்னை உயர்நீதி மன்ற நீதி பதிகள், அரசியல் தலைவர்கள் என்னுடன் உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றிய தோழ ஆசிரியர்கள், என்னுடைய தண்பர்கள், திரு வேங்கடம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கள், பிற பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் இவற்றிலுள்ள பேராசிரியர்கள், என்னுடைய பழைய மாணவர்கள், என்னுடைய இன்றைய மாணவர்கள் இவர்கட்கெல்லாம் எழுதி ஆசீச் செய்திகள் வாழ்த்துச் செய்திகள் பெற்று இவற்றை என் மணிவிழா மலராக ஆக்கினர். பொய்யா மொழி ஆசிரியர் திரு P. ஆதிமூலத்தால் மலர் வடிவம் அருமையாக அமைந்தது. என்னிடம் இருந்த ஒளிப்படங் களையெல்லாம் மலரில் சேர்த்துமலரைப் பொலிவு பெறச் செய்தார். இந்த விழாவிற்கு தலைமை தாங்குவதற்காகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் எஸ். சூரிய மூர்த்தி (கல்லூரியில் ஒரு சாலை மாணாக்கர்) ஒப்புக் காண்டார். என்னுடைய அருமை மாணவர் ஜார்ஜ் ஸ்டீபன் (எம்ஃபில் ஆய்வு மாணவர்), துறைக்கு அளித்த என்னுடைய ஒளிப்படத்தைத் திறந்து வைக்க என் கல்லூரி வாழ்க்கை முதல் ஒரு சாலை மாணவராக இருந்து 40 ஆண்டுகளாக நெருங்கிப் பழகிய திருச்சி வழக்குரைஞர் திரு. P. அரங்கசாமி ரெட்டியார் ஒப்புக் கொண்டார்; இதனைத் துறைக்காகப் பெற்றுக் கொள்ள டாக்டர் கு. தாமோதரன் ஒப்புக்கொண்டார். (பின்னர் பின் வாங்கியதால் த மி ழ் ச் சங்க மாணவத் தலைவர்