பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறையில் என் மணி விழா 55露 N. கிருபானந்தம் பெற்றார்). ஏதோ காரணத்தால் ஜஸ்டிஸ் சூரியமூர்த்தி வர முடியாமற் போனதால் திரு அனந்த சயனம் அய்யங்கார் (முன்னாள் பீகார் மாநில ஆளுநர்) அவர்கள் (திருப்பதி வாழ்க்கையில் தந்தையாக இருந்து என்னை வாழ்த்திக் கொண்டிருந்தவர்) தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை (24-9-77) என்னுடைய செலவில் கூடி யிருந்த சுமார் 159 பேருக்கு ஒரு சிறிய சிற்றுண்டி விருந்து அளித்தேன். மேடையில் ஒரு சிலர் என்னை வாழ்த்தினர்: கூட்டத்திலுள்ள அனைவரும் என்னைப் பேசாத பேச்சாகி வாழ்த்தியிருக்க வேண்டும், இத்தனை பேர்களின் வாழ்த்தி னாலுழ் இறைவன் திருவருள் பலத்தாலும் இன்றும் (ஏப்பிரல்-1990) நான் உடல்நலத்துடனும் இருந்துகொண்டு தமிழ்ப்பணியும் தெய்வப்பணியும் ஆற்ற முடிகின்றது, என் ஆசையெல்லாம் பாரதியாரின் ஆசைதான். மனத்திற் சலன மில்லாமல் மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடநீ செயல்வேண்டும் கனக்கும் செல்வம், நூறுவயது: இவையும் தர நீ கடவாயே’ என்று அவர் வேண்டுவதைப்போல் நானும் கணபதியை வேண்டுகின்றேன். இந்தக் குமிழியில் மணிவிழா மலரில் வாழ்த்திய சில நெஞ்சங்களைக் காட்டுவேன். எல்லா நெஞ்சங்களும் அன்புடையவை தாம். கவிதை வடிவில் உள்ள சில கற்கண்டு போல் இனிப்பதால் அவற்றை மட்டிலும் ஈண்டுக் காட்டு வேன். 1. பா. க : தோத்திரப் பாடல்கள். விநாயகர் நான்மணிமாலை-7.