பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 நிைைவுக் குமிழிகள்-4 பேராசிரியர் க. வெள்ளைவாரணன் வாழ்த்து (5 பாடல்களில் 2): உழைப்பினால் உயர்வதுவே உரவோர்தம் செயலெனவே உலகு போற்றப் பிழைப்பினா லன்றியே பேருழைப்பால் தமிழ்த்துறையின் பெற்றி நாட்டி அழைப்பினால் நல்லறிஞர் பேரவையைத் திருப்பதியில் அமைத்து நன்னூல் இழைப்பினால் டாக்டர்என இயல்பட்டம் பெற்றுமகிழ் இனிய நண்பர். சுப்புரெட்டி யாரெனவே தூயதமிழ் அறிஞரெல்லாம் போற்ற நாளும் ஒப்பிலா தமிழ்ப்பணிசெய் திருவாளர் உழைப்பினுக்கோர் உருவ மாக இப்புவியோர் பாராட்ட விளங்குபே ராசிரியர் இமையா முக்கண் அப்பன் அரு ள்ால்மக்கள் சுற்றமுடன் நீடுழி அமர்ந்து வாழி.” திரு. பெ. இராமானுசரெட்டியார் (தேவானூர், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்) வாழ்த்து (9 பாடல்களில் 3): தன்னையொரு தமிழ்த்தும்பி என்றே அன்று சாற்றியஎம் சுப்புஎனும் தகைமை யாளன் சொன்னதிலோர் சுவைகண்டேன் பேதைத் தும்பி துழாவிபல மலர்தேடித் தேனைச் சேர்த்து என்னே! தான் துய்க்காது பறிகொடுக்கும் ஏழைப்போல் அன்றியிவர் தாமும் துய்த்து மன்னுலகில் என்போல்வார் தெவிட்டா துண்ண வழங்கிவரும் வளமைக்கோர் வரம்பும் உண்டோ? 2. மணிவிழாமலர்-பக். 46,