பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகுப் புறமாகப் பேனாக்குத்து 25f வைக்க, அவன் 'சிறுவர் முகம்’ எனக் கூறி இத்தீவினை நீங்க தவம் செய்யுமாறு ஏவி, உயிர் விடுகின்றான். அடுத்த நாள் காலையில் பாண்டவர்கள் பாசறைக்குள் புகுந்து இரவில் நிகழ்ந்தனவற்றை அறிகின்றனர். திரெளபதி புத்திரசோகத்தால் துடிதுடித்துப்போகின்றாள் வீமனும் விசயனும் அசுவத்தாமனைச் தேடிச் சென்று அவனை முனிவர்கள் நடுவே இருப்பதைக் காண்கின்றனர். விசயன் சினந்து அசுவத்தாமன்மீது நான் முகன்கணை யைத் தொடுக்கின்றான். அசுவத்தாமனும் அருகில் கிடந்த அருகம் புல்லை எடுத்து மந்திரித்து நான் முகன் கணையாக ஏவுகின்றான். இரண்டு கணைகளும் போரிடுவதால் உலகம் அழிந்து விடுமோ என்று தேவர்களும் முனிவர் களும் அஞ்சுகின்றனர். இருவரையும் தத்தம் கணைகளைத் திரும்பப் பெறுமாறு வேண்டுகின்றனர். பார்த்தன் கணையைத் திரும்பப் பெறுகின்றான்; அசுவத்தாமன் தனக்கு அவ்விதம்திரும்பப் பெறத்தெரியாது என்றும், ஆனால் வேறொருவர்மீது திருப்பி விடத் தெரியும் என்றும் கூறுகின்றான் அனைவரும் அதற்கு ஒப்புதல் தெரி விக்கவே, அசுவத்தாமனின் பிராமண மூளை வேலை செய்கின்றது. பாண்டவர்களின் குலம் விளங்காமல் போகச் சதிசெய்கின்றான்; இளம் பஞ்சபாண்டவர்கள் ஒழிந்தனர், அபிமன்யுவும் ஒழிந்தான். அவன் மனைவி, உத்தரையின் கருப்பத்தில் பரிட்சித்து வளர்ந்துவரு கின்றான். அந்தச் சிசுவின்மீது நான்முகன் கணையைத் திருப்பிவிட்டால் பாண்டவ வமிசமே இல்லாது ஒழியும்’ என்று கருதி அதன் மீது திருப்பிவிடுகின்றான். கண்ணன், தன் மூல உருவத்துடன் பஞ்சாயுதங்களால் அக்கணையை அழித்து குழந்தையைக் காக்கின்றான். காரைக்குடியிலிருந்து வந்த இரண்டாவது ஆணை அசுவத்தாமனின் நான்முகன் கணையை யொத்தது. ஆனால் அதனைக் கண்ணன் காத்தது போல் இப்போது வேங்கடவன் நிழலில் வாழும் என்னை அவன் சமயம் வரும்