பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.56 நினைவுக்குமிழிகள்-4 பழந்தோழர் தமைக்கண்டு பாசமுடன் அரவணைத்துத் தொழுதகைய பெரியாரைத் துணையாக்கிப் பத்தியினால் கொழுந்தனைய இருமகற்கும் குலராமன் பெயரமைத்துச் செந்தமிழைத் திறனாயும் சீர்த்தியினை வாழ்த்துகின்றேன். நண்பர்களின் நடுவினிலே நகைத்துமகிழ் பேறுடையான் எண்ணியதை முடிப்பதிலே ஏறனைய வீறுடையான் பண்னொழுகும் ஆழ்வார்தம் பாசுரத்தின் ஆறுடையான் புண்ணியத்தின் கூறுடையான் புகழோங்க வாழ்த்துகின்றேன். கற்பிக்கும் முறைகண்ட கணக்காயன் வாழியரோ! அற்புதமாம் அணிநூலுக் கரசாங்கப் பரிசுபெறும் விற்பன்ன்ை வாழியரோ! வேங்கடவன் கடிதத்தால் உற்பவிக்கும் கருக்காக்க உரைவகுத்தோன் வாழியரோ! மணிவிழாக் கொண்டாடும் மாண்சுப்பு ரெட்டியவர் துணையாக மணமக்கள் சுற்றமெலாம் பாராட்ட இணையில்லாப் புகழெய்தி 'இன்னுமொரு நூற்றாண்டு’ மணிவண்ணன் தண்ணருளால் மங்கலமாய் வாழியரோ!“