பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறையில் என் மணி விழா 557 திரு எஸ். கே. இராமராசன் (கம்பராமன்) அனுப்பிய வாழ்த்துச்செய்தி (6 பாடல்கள்) செந்தமிழ்த்தாய் பல்லாண்டு கனிந்து செய்த திருத்தவத்தின் பயனாய புனிதக் கோயில் நந்தலிலாக் கோபுரங்கள் தெய்வம் யாவும் நலிவெய்தா தன்புடனே பாது காக்கச் சுந்தரமார் தென்னகத்தின் மகிழ்வோ குற்ற தூய தனிப் பண்டகுல விளக்கம் போல வந்துதித்த சான்றோனே! விஞ்ஞானத்தின் வளங்கண்டு பொலிசுப்பு நம்பி வாழ்க! வண்ணமுறு கோட்டாத்துார் தன்னில் தோன்றி வளனார்தம் கல்லூரி சிறக்கக் கற்றுப் புண்ணிய மார் துறைசைநகர்ப் பள்ளி யோங்கப் பொலிவுடைய தலைமையினை விரும்பி யேற்றுத் தண்ணளியார் காரையினில் பயிற்சிக் கல்வி தனைவளர்த்து வேங்கடத்தில் அறிஞர் போற்ற நண்ணுகலைத் தமிழ்த்துறைக்குத் தலை வனாகி நலமுற்ற முயற்சிக்குப் பொலிவு தந்தாய் காலந்தான் கண்போன்ற தென்றும், உற்ற கடமைதான் பொன்போன்ற தென்றும், மிக்க சீலந்தான் பண்போன்ற தென்றும், கண்ட திருவாள! நின்னுடைய முயற்சி யாவும் ஞாலந்தான். இலக்கியமாய்க் கண்டு துய்க்க நாடோறும் பல்கலைகள் ஆய்ந்து தேர்ந்தாய்! பாலந்தான் நின்னுரல்கள் அறியா மைக்குப் பலியாகா, துலகமெலாம் அதனால் உய்யும் கற்றவர்க்குப் புலனாகாக் காப்பி யத்தைக் கலைமெருகு கொடுத்தினிதே யறியச் செய்தாய். பொற்றொடியார் தமைமணக்கும் காளைகயர்க்குப் பொலிவுடையில் லறநெறியைப் புரியச் செய்தாய் 4. மணிவிழாமலர்-பக். 64,