பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛56 நினைவுக் குமிழிகள்-4 கொற்றமுறும் அணு நுட்பம் இனிதே யாய்ந்து குளிர்தமிழிற் பகர்ந்துள்ளம் தெளியச் செய்தாய் உற்றகலை திங்கட்குப் பயணம் செய்த ஒளிநெறியை உளந்தோறும் விரியச்செய்தாய் மலருற்ற வாசம்போல் விழிக்கெட் டாமல் மனத்தினிலே உணர்வளிக்கும் கவிதை தன்னை நலமுற்ற சான்றோர்கள் வியப்புக் கொள்ள நயமுற்ற பெருநூலில் இனிதே யாய்ந்து வலமுற்ற சான்றோர்கள் நாளும் நாளும் வாழியநம் சுப்புநம்பி என்று போற்றப் புலமுற்ற உயர்வாழ்க்கைப் பெற்றாய்! பெற்றாய்! பொலிவுடைய இமயம்போல் கீர்த்தி யுற்றாய் உன்னுகின்ற போதெல்லாம் இன்பம் நல்கும் ஒப்பற்ற வாய்மொழியை இனிதே யாய்ந்து நன்னயஞ்சால் நம்பிள்ளை முதலாம் சான்றோர் நல்வழியில் இனிதேகிக் காரி மாறன் பன்னியதத் துவம்கண்டு டாக்டர் என்று பார்புகழச் சிறப்புற்றாய்! சுப்பு நம்பி! இன்னும்பல் நூல்யாத்து வாழ்க! வாழ்க! ஏற்றமுடன் பல்லுழி வாழ்க! வாழ்க!" திரு. கி. வேங்கடசாமி ரெட்டியார் (வி. பூதூர் அஞ்சல, வழி-வளவனூர், தென்ஆர்க்காடு மாவட்டம்) வாழ்த்து {3 பாடல்கள்): உழைப்பதனால் மிக உயர்ந்தோன். யார்க்கும் நல்லோன், உண்மையுணர் நன்னெஞ்சன்: உணர்ச்சி மிக்கான்; அழைப்புவிடு மாநிலங்கள் பலவும் சென்றோன்; ஆழ்வார்கள் கருத்துணர்ந்தோன் : அயர்வே இல்லான்; 5. மணிவிழா மலர்-பக் 14-15